சனி, 16 நவம்பர், 2019

என் மகளுக்கு தூக்கு கயிறு எப்படி கிடைத்தது.. சுதர்சன் பத்மநாபனை விடக்கூடாது.. பாத்திமா தந்தை ஆவேசம்

Hemavandhana - tamil.oneindia.com : :  சென்னை: எனது மகள் சடலத்தைப் பார்த்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டது போலவே தெரியவில்லை. அவரது மரணத்திற்கு சுதர்சனன் பத்மநாபன்தான் காரணம். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி ஒரு பெண் பிள்ளை மரணிக்கக் கூடாது என்று பாத்திமா லத்தீபின் தந்தை அப்துல் லத்தீப் ஆவேசமாக கூறியுள்ளார். பாத்தமா லத்தீபின் பெற்றோர், உறவினர்கள் சென்னை வந்துள்ளனர். ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் கொடுத்த நெருக்கடியே தற்கொலைக்கு காரணம் என்றும், நடவடிக்கை தேவை என்றும், கேரள முதல்வரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். 
அந்த மனுவை கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டிஜிபி ஜே.கே.திரிபாதி ஆகியோரை சந்திக்க அவர்கள் சென்னை வந்திருந்தனர். முதலில் அவர்கள் டிஜிபியை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களை அப்துல் லத்தீப் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 
தைரியசாலி எனது மகள் மிகவும் நல்ல படிப்பாளி, தைரியமானவள், எல்லாவற்றிலும் நம்பர் ஒன். எதையும் எங்களிடம் பகிர்ந்து கொள்வாள். இங்கு வந்து சேர்ந்த சில மாதங்களிலேயே அவர் உயிரிழந்துள்ளாள். அவளுக்கு மிகவும் கடுமையான நெருக்கடிகள் தரப்பட்டுள்ளன. 
சுதர்சனன் பத்மநாபன் எனது மகளை துன்புறுத்தியுள்ளார் என்று ஏற்கனவே கூறியுள்ளாள். 
 
எனது மகள் சடலத்தைப் பார்த்தபோது எனது மகள் தற்கொலை செய்து கொண்டது போலவே தெரியவில்லை. அவளது மரணம் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. இதுகுறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். எனது மகள் தூக்கில் தொங்க கயிறு எப்படி கிடைத்தது. அது எங்கு கிடைத்தது. இப்போது அது எங்கே உள்ளது. எனது மகள் மரணித்த பிறகு அவரது அறையை பூட்டி ஏன் சீல் வைக்கவில்லை. செல்போனை யார் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வகையில் அறையில் கிடந்தது. 
 
 எனது மகளின் மரணம் குறித்து விரிவான விசாரணை தேவை என்று டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளோம். அவர் இதில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். தீவிர விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. தற்கொலை? தற்கொலை? எனது மரணத்திற்கு சுதர்சனன் பத்மநாபன்தான் காரணம் என எனது மகள் தெளிவாக சொல்லியுள்ளாள். எனது மகள் எதைச் செய்தாலும் அதை எழுதி வைப்பார். எனவே இது தற்கொலையாக இருந்தால் நிச்சயம் எழுதி வைத்திருப்பார். அதை கண்டுபிடிக்க வேண்டும். எப்போதும் எனது மகள் இரவில் என்னுடன் பேசுவார். சம்பவத்தன்று அவர் பேசவில்லை. 
 
எனது மகளுக்கு நீண்ட காலமாகவே நெருக்கடி கொடுத்துள்ளனர். துன்புறுத்தியுள்ளனர். இதனால்தான் இந்த துயரம் நடந்துள்ளது. நான் சிசிடிவி காட்சிகளை கேட்டேன். ஆனால் இதுவரை எனக்குத் தரவில்லை. எனது மகள் தொடர்பான அனைத்து விசாரணையும் வெளிப்படையாக நடக்க வேண்டும். 
 
இனி ஒரு பாத்திமாவின் உயிர் போகக் கூடாது. இதுதான் கடைசியாக இருக்க வேண்டும். எனது மகள் படிப்பு உள்பட அனைத்திலும் முதலிடத்தைப் பெற்றவர் எனது மகளுக்கு ஏற்பட்ட கதி இன்னொரு பெண் பிள்ளைக்கு இனி ஏற்படக் கூடாது. கேரள முதல்வரும், கேரள டிஜிபியும் இதை தமிழக முதல்வர்,டிஜிபிக்கு வலியுறுத்தியுள்ளனர். 
 
நாங்கள் கேரளாவில் வசிக்கிறோம். இங்கு என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. தமிழக மக்களும், பத்திரிகையாளர்களும்தான் எனது மகளுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நான் தமிழக அரசையும், தமிழக காவல்துறையையும் முழுமையாக நம்புகிறேன். இதுவரை எனது மகளின் மரணத்திற்காக சென்னை ஐஐடி நிர்வாகம் ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது வேதனை அளிக்கிறது என்று கூறினார் 
 
அப்துல் லத்தீப். முதல்வருடன் பாத்திமா தந்தை சந்திப்பு முதல்வருடன் பாத்திமா தந்தை சந்திப்பு டிஜிபியைச் சந்தித்ததை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, அப்துல் லத்தீப் சந்தித்தார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. 
அப்போது தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி, கடையநல்லூர் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோரும் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், குற்றவாளியை நிச்சயம் கைது செய்வோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்ததாக அப்துல் லத்தீப் தெரிவித்தார். இதேபோல தமிழக ஆளுநரையும் நான் சந்தித்து மனு அளிப்பேன் என்றும் அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார். பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் அப்துல் லத்தீப் சந்தித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினார்

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/chennai-iit-student-death-fatimas-parents-meet-cm-edapadi-palanisamy-368577.html

கருத்துகள் இல்லை: