Jeevan Prasad :
மஹிந்த,மெதமூலன
வீட்டுக்கு சென்று விட்டார். பசில் - கோட்டா மூட்டை முடிச்சுகளை கட்ட
நினைக்கிறார்கள். பிரதேச தலைவர்களோ அடித்தாவது பறிக்கலாமா என
யோசிக்கிறார்கள்!
ஜனாதிபதி தேர்தல் குறித்த கருத்து கணிப்புகளும் கள நிலவரங்களும் கோட்டாபய தோல்வியடைவார் என சென்ற வாரத்தில் தெரியவந்தது. இதிலிருந்து மீள கோட்டாவின் தேர்தல் பணிகளை பசில் மற்றும் மகிந்த தமது கரங்களில் எடுத்தும் கடும் பிரயத்தனத்தை காட்ட முற்பட்ட போதும் அவை நினைத்த அளவு வெற்றி அழிக்கவில்லை.
நேற்று பசில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கோட்டா தோல்வியடைவதை தெரிந்து விட்டது போல கருத்து பகர்வுகள் இடம்பெற்றன.

எது எப்படியோ மகிந்த தற்போது மெதமூலனவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிச்
சென்றது தோல்வியை அவரே உறுதி செய்து விட்டார் என அவரோடு இருந்தோர்
தெரிவிக்கின்றனர். பசிலும் கோட்டாவும் நாட்டை விட்டு வெளியேற
முயல்கின்றனர். இவர்களது கடவுச் சீட்டுகள் நீதிமன்றத்தில் உள்ளமையால்
அரசில் உள்ள ஒரு பிரபல அமைச்சரை கொண்டு பெற பேச முயன்றுள்ளார்கள். ஆனாலும்
அவர் அது கடினமான விடயம் என கைகழுவி விட்டதாக அறியக் கிடைக்கிறது.
இதேவேளையில் அவர்களது பிரசார குழுவின் பொறுப்பு வகித்தவர்களும் அவர்களது காரியாலங்களை விட்டு சென்று விட்டார்கள். அதற்கு பொறுப்பான ஒரு நண்பரோடு பேசிய போது கடந்த 2 - 3 நாட்களாக தம்மோடு ராஜபக்ச குடும்பத்திலிருந்து எந்தவொரு நபரும் தங்களோடு தொடர்பு கொள்ளவோ அல்லது அடுத்த கட்ட வேலை செய்ய வேண்டும் என்பது குறித்து பேசவோ தொடர்பு கொள்ளவோ இல்லை என்று விரக்தியோடு சொன்னார். இந்த நிலையில் அங்கிருப்பதில் பிரயோசமில்லை எனும் நிலையில் வெளியேறியதாக சொன்னார்.
இப்போது கோட்டாவுக்கு நெருக்கமான முன்னாள் இராணுவ தரப்பு மற்றும் பொதுசன முன்னணி (மொட்டு) கட்சியின் தரப்பு இடையே முரண்பாடுகளை காணக் கூடியதாக உள்ளன. முன்னாள் இராணுவ தரப்பினர் ஆரம்பத்தில் தேர்தல் பணிகளை கைகளில் எடுக்க முற்பட்ட போது அதை பசிலும் மகிந்தவும் தடுத்து அந்த பணிகளை தம் கைகளுக்குள் எடுத்துக் கொண்டனர். அனைத்து ஊடக பரப்புரைகளும் பசில் கைக்கு வந்தன. இப்போது தோல்வியடையப் போவதை அறிந்ததும் முன்னாள் இராணுவத்தினர் தங்களிடம் அனைத்து பொறுப்பும் இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காது என குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர். விமல் வீரவங்சவும் உதய கம்மன்பிலவும் பசிலின் பெற்றோரை கெட்ட வார்த்தையில் திட்டி வருவதாக அங்குள்ளோர் தெரிவிக்கிறார்கள்.
பசிலோ அவர்களுக்கு இன - மதவாதத்தை கக்கி பிரசாரம் செய்திருந்தால் இந்தளவு கூட ஆதரவு கிடைத்திருக்காது எனவும் தான் மட்டும் இல்லாமல் இருந்தால் இதை விட படு தோல்வியை தழுவ வேண்டி வரும் எனவும் பதிலளித்துள்ளார்.
நிலமை இப்படி இருக்கையில் மொட்டு பிரதேச தலைவர்கள் அடித்தாவது ஆட்சியை எடுக்க வேண்டும் என பேசிவருகிறார்கள். சிறுபான்மையினரை வாக்களிக்காமல் செய்ய சிலரோடு பேசி தடுக்க முயன்று வருகிறார்கள். வடக்கு - கிழக்கு பகுதிகளில் தேர்தலை பகிஸ்கரிக்க முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்ய பார்க்கிறார்கள். அது குறித்த கைப்பிரதிகளை விநியோகித்தும் உள்ளனர்.
சிங்கள பகுதிகளில் சேறடிப்பு செய்ய அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட சில போஸ்ட்டர்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு உள்ளன.
சஜித் தரப்போ தமது வெற்றிக்கான நம்பிக்கையோடு அடுத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக