மாலைமலர் : மகாராஷ்டிரா மாநிலத்தில் 300 அடி ஆழ்துளை
கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவனை தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர்
பத்திரமாக மீட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா
மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ளது கல்வான் என்ற கிராமம். இங்கு 300 அடி
ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் இன்று காலை தவறி விழுந்தான்.
இதுதொடர்பாக,
உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு
விரைந்து வந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சிறுவனை
மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு 300 அடி ஆழமுள்ள
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர்
பத்திரமாக மீட்டனர்.
இதைத்தொடர்ந்து, அந்த
சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். சிறுவனின் உடல்நிலையை
கண்காணித்து வரும் டாக்டர்கள், அவனது உடல்நிலை சீராக உள்ளது என
தெரிவித்தனர்.
300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக