tamil.oneindia.com :
நுவரெலியா:
இலங்கை அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி தமிழர்கள் மிகவும் ஆர்வத்துடன் காலை முதல் மாலை வரை மலையகப் பகுதியில் வாக்களித்தனர். கொட்டும் மழைக்கு நடுவே இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாக்களித்தனர்.
இலங்கையில் 8-ஆவது அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. பலத்த பாதுகாப்புகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது. மொத்தம் 12,845 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1.60 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்த தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப் பதிவில் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் (மலையகத் தமிழர்கள்) ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 488 வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்தனர். நுவரெலியா – மஸ்கெலியா தொகுதியில் 256 வாக்குசாவடிகளும், கொத்மலை தொகுதியில் 81 வாக்குசாவடிகளும், வலப்பனை தொகுதியில் மூன்று இடங்களில் இரட்டை வாக்கு சாவடிகள் உட்பட 76 வாக்கு சாவடிகளும், ஹங்குராங்கெத்த தொகுதியில் 75 வாக்கு சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
இப்பகுதிகளில் காலை முதலே மழைக்கும் நடுவே பெரும் எண்ணிக்கையில் மலையகத் தமிழர்கள் வாக்களித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக