வெள்ளி, 4 அக்டோபர், 2019

மோடிக்கு பேனர் வைக்க உயர் நீதிமன்றம் அனுமதி

தினமலர் : சென்னை: பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்கும்
நிகழ்ச்சிக்காக பேனர் வைத்துக்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியுள்ள சென்னை ஐகோர்ட், பொது மக்களுக்கு இடையூறு இன்றி வைக்க அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் சட்ட விரோதமாக பேனர் வைக்க சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. சமீபத்தில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால், வைத்த பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்து இறந்தார். இதனிடையே மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்து இரு தரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து பேச உள்ளனர். இந்த ஆலோசனை வரும் 11 முதல் 13 வரை நடக்க உள்ளது. தமிழகம் வரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரை வரவேற்க, விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு மனு தாக்கல் செய்தது

கருத்துகள் இல்லை: