ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

கீழடி .தமிழர் திராவிடர் ..... இந்தியா முழுமையும் பரவியிருந்த திராவிட நாகரீகத்தின் ... முனைவர் சுபாஷினி ..வீடியோ


முனைவர் சுபாஷினி : கீழடி என்பது தமிழர் நாகரீகமா திராவிடர் நாகரீகமா என்ற சர்ச்சை ஓடிக்கொண்டு இருக்கிறது , உங்களை பொறுத்தவரை இது தமிழர் நாகரீகமா   திராவிடர் நாகரீகமா?
நம்முடைய தமிழ் சிந்தனையில் இப்போது என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் எது முக்கியம் என்ற கேள்வி அவர்களுக்கு இல்லை!
அவர்களுக்கு எதாவது ஒரு சென்சேஷன் ஆக்கி கொண்டு உடனே அதைப்பற்றி உணர்ச்சி பூர்வமாக பேசிக்கொண்டு அதில் மகிழ்ச்சி அடையலாம் என்ற வகையில் அவர்கள் தமிழுக்கு தொண்ட்டாற்றி விடலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
இப்பொழுது வைகை நதிக்கரை நாகரீகம் என்று சொல்லும்பொழுது .
அதாவது இந்த 293 இடங்களை அவர்கள் அடையாளம் செய்திருக்கிறார்கள்.
இந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் யாரென்று சொல்லும்பொழுது .தமிழர்கள்தான் என்பதால் நாம் நிச்சயம் இதை தமிழ் வைகைக்கரை நாகரீகம் என்பதில் நிச்சயம் எந்த ஐயப்பாடும் இன்றி ஏற்றுகொள்ளலாம் .
ஆனால் இந்தியா முழுமைக்குமான குறியீட்டை அல்லது ஒரு கருது கோளை வைக்கும் பொழுது எந்த வகையில்  நாம் ஆரியத்தை எதிர்க்கவேண்டும் .. அல்லது ஆரியத்துக்கு எதிரான ஒரு கருத்தை முன்வைக்க வேண்டும் என்று யோசிக்கும் பொழுது அதற்கு சான்றாக நமக்கு கிடைப்பது .. அல்லது அதற்கு துனையாக நமக்கு கிடைப்பது திராவிடம் என்ற சொல்தான்!
ஏனென்றால் தமிழ் மட்டுமல்லாது திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்த பல மொழிகள் இன்று தமிழ் சொற்களை அல்லது தமிழ் அடிசொற்களை கொண்டவையாக இயங்குகின்றன.

அந்த மாதிரியான சொற்களை இன்று குஜராத் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஓடிஸா, மத்திய பிரதேசம் இந்த பகுதிகளெல்லாம் உள்ள பழங்குடி மக்களில் எல்லாம் இந்த சொற்களை காண்கின்றோம்.
வரை படத்தை பார்க்கும்போது ஆப்கானிஸ்தான் வரைக்கும் இந்த தமிழர்கள் என்ற சமுகம் இருந்திருக்கின்றது என்றதன் சான்றாகத்தான் இவைகள் அமைகின்றன.
ஆனாலும் தமிழ் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக திராவிடம் என்று சொல்லும்பொழுது சிறிய சிறிய வேறுபாட்டுடன் உள்ள அந்த மொழியும் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புகளை நாம் பார்க்கிறோம்.
ஆக அந்த பார்வைக்கு திராவிடம் என்ற சொல் பொருந்துவதாக இருக்கின்றது.
ஆக நாம் தமிழர் திராவிடர் என்ற வகையில் ஒரு அரசியல் படுத்தும் வகையில் நாம் போராடிக்கொண்டு தெலுங்கர்களையோ அல்லது கன்னடர்களையோ மலையாலிகளையோ துளு மக்களையோ நாம் திட்டுவதாலோ எந்த பிரயோசனமும் இல்லை .
ஏனென்றால் நம் முன்னால் இருக்கும் பெரிய சவாலாக எது இருக்கிறது என்றால்  வடமொழியில் இருந்து அனைத்தும் வந்தது என்பதை நாம் எதிர்க்கவேண்டிய அல்லது அதற்கு நாம் தக்க சான்றுகளை கொடுக்கவேண்டிய காலக்கட்டத்தில் இருக்கின்றோம் .
அதற்கு நாம் ஏனைய திராவிட மொழிக்குடும்பங்களையும் அரவணைத்து செல்லவேண்டிய ஒரு சூழலையும் நாம் காண்கின்றோம்.
கீழடி என்று வரும்போது அது முற்று முழுதாக தமிழர் நாகரீகம்தான் அதில் சந்தேகம் இல்லை .
ஆனால் சிந்து சமவெளி என்று வரும்போது இந்தியா முழுமைக்குமான பார்வையை வைத்துகொண்டு திராவிடம் ஆரியம் என்ற கருது கோளோடு நாம் இயங்கவேண்டிய தேவை இருக்கிறது.

கருத்துகள் இல்லை: