செவ்வாய், 1 அக்டோபர், 2019

ஐ.ஐ.டி.,யில் எம்.டெக்., படிப்புக்கான கல்வி கட்டணம் 900% உயர்வு!


தினமலர் :ென்னை:'எம்.டெக்., படிப்புக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்படும்' என, ஐ.ஐ.டி., நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஐ.ஐ.டி.,யில் சேரும், எம்.டெக்., மாணவர்களுக்கு, பல ஆண்டுகளாக கல்வி கட்டணம் உயர்த்தப்படவில்லை. எனவே, கல்வி கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் படிப்பை பாதியில் விடாமல் தடுப்பதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.இதற்காக, ஐ.ஐ.டி.,யின் நிர்வாக குழு கூடி, கட்டண உயர்வை முடிவு செய்யும். இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். அதேநேரத்தில், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடரும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
 
M.m. Abdulla  : ஐ.ஐ.டி யில் நான்காண்டு பி.இ படிப்பதற்கு இடம் பெற்று படிப்பவர்களில் திறமை குறைவான மாணவர்களுக்கு மூன்றாம் ஆண்டோடு பி.எஸ்.சி பட்டம் வழங்கி வீட்டுக்கு அனுப்ப ஐ ஐ டி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளி வருகின்றன!
மிகக் கடினமான ஐ ஐ டி நுழைவுத் தேர்வின் மூலம் உள்ளே வரும் மாணவர்களில் திறமை குறைவானவர்களும் இருப்பார்கள் என்றால் திறமை குறைவானது அந்த நுழைவுத் தேர்வு முறைதானே தவிர மாணாக்கர் அல்ல!!
ஏற்கனவே அதில் பெரும்பாலும் உயர்சாதி மாணாக்கர்கள் தான்!
உயர்சாதி மாணாக்கரின் ஒட்டு மொத்த கூடாரம் தான் ஐ ஐ டி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மிச்சம் இருக்கும் ஒரு சில BC , MBC, SC & ST மாணவர்களை பி.இ பட்டம் பெற விடாது ஐ ஐ டி யில் பட்டம் என்றால் அது "எங்களுக்கு" மட்டுமே என்ற நிலையை அப்பட்டமாக உருவாக்கும் சதித் திட்டம்தான் இது என்பதில் சந்தேகமே இருக்க முடியாது!!
ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரை பெருமையில், தமிழ்தேசிய சாதிப் பெருமையில் நீங்கள் பெருமிதப்படும் நேரத்தில் கோவணத்தை அவிழ்த்து அம்மணமாக்கி உங்கள் உரிமை எனும் மானத்தை கப்பலேற்றிக்கொண்டு இருக்கிறது வர்ணாசிரமம். முழுச்சா பொழச்சுக்குவ.
# இப்பல்லாம் யார் சார் ஜாதி பார்க்குறா?
M.m. Abdulla

கருத்துகள் இல்லை: