வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

வைகோ : உங்களுக்கு இந்தி வேண்டுமா?இந்தியா வேண்டுமா?.. இந்தியில் கூச்சலிட்டவர்களை எச்சரித்த ...

Durai Mohanaraju : நேற்று இந்திய மருத்துவ ஆணைய மசோதா விவாதம்
மாநிலங்கள் அவையில் நடைபெற்றது.அப்போது மேற்கு வங்கம், கேரளம், ஆந்திரம், உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் தான் பேசினர்.அவர்களின் வாதங்களுக்குப் பதில் அளித்த அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இந்தியில் பேசத் தொடங்கினார்.
அப்போது தலைவர் வைகோ எழுந்து,
"இது மருத்துவம் குறித்த விவாதம்
அதில் நுணுக்கமான சொற்களை ஆங்கிலத்தில் தான் சொல்ல முடியும்.எனவே, நீங்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள்.." என்றார்.
அமைச்சரும் அதை ஏற்றுக்கொண்டு, ஆங்கிலத்தில் பேசினார்.
உடனே,வடநாட்டு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து,
"இந்தியில்தான் பேச வேண்டும்..." என்று கூச்சல் போட்டனர்.
உடனே வைகோ,
"இந்தியில் பேசக்கூடாது.உங்களுக்கு இந்தி வேண்டுமா?இந்தியா வேண்டுமா?உங்களுடைய வெறிப்போக்கு இந்தியாவை உடைத்து விடும்..." என்று உரத்த குரலில் சொன்னார்.

உடனே அவர்கள் வைகோவைப் பார்த்து, ஆத்திரத்தோடு இந்தியில் கூச்சல் போட்டார்கள்.தேசவிரோதி என்றார்கள்.
"நீங்கள் இந்து ராஷ்ட்ர வெறியர்கள்.உங்கள் கூச்சலுக்கு எல்லாம் நான் அஞ்சமாட்டேன்.இந்தியை எதிர்த்து இந்திய அரசியல் சட்டத்தை எரித்து ஜெயிலுக்குப் போனவன்..." என்றார் வைகோ
மோதல் ஏற்படும் நிலை உருவானது.
உடனே வைகோ,
"ஒழியட்டும், ஒழியட்டும்.இந்தி ஆதிக்கம் ஒழியட்டும்.அழியட்டும் அழியட்டும்
இந்தி ஆதிக்கம் அழியட்டும்.ஒழிக ஒழிக இந்தி ஆதிக்கம் ஒழிக.." என்று
தொடர்ந்து முழங்கங்கள் எழுப்பினார்.
அதன்பின்னர் அமைச்சர் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மாறிமாறிப் பேசினார்.
அவைத்தலைவர் வெங்கைய நாயுடு,
மொழிப்பிரச்சினையால் இங்கே மோதல் ஏற்பட்டது. இந்திய நாட்டின் அனைத்து மொழிகளிலும் இங்கே பேசலாம்.
No imposition
No opposition
இனிமேல் திணிப்பும் இல்லைஎதிர்ப்பும் இல்லை.." என்றார்.

கருத்துகள் இல்லை: