சனி, 3 ஆகஸ்ட், 2019

உத்தர பிரதேசம் .. 17 வயசு பெண் பாஜக எம்.எல்.ஏவால பாலியல் வன்கொடுமை... தொடர் குற்றங்கள்


Sadhu Sadhath : ஒரு கிரைம் திரில்லர் எடுக்க கதைய தேட வேண்டியதில்லை உபியில நடந்த இந்த சம்பவங்களை அப்படியே சீன் பை சீனா எடுத்தாலே போதும் கண்டிப்பா ஹிட்டாகும் .... இதே காங்கிரஸ் ஆட்சியில நடந்திருந்தா இந்த ஊடகங்கள் எவ்வளவு ஊளையிட்டிருப்பாங்க ... இப்ப பாருங்க பொத்துனாப்புல இருக்காங்க ...
எவ்வளவு கேவலமா போயிடுச்சுல நாடு ... 😢
June 2017: ஒரு 17 வயசு பொண்ணு பாஜக எம்.எல்.ஏவால உனோ நகரத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுறா
June 2017 - April 2018: போலிஸ் புகாரை வாங்க மறுக்குறாங்க. பெற்றோர்கள் கோர்ட்டுக்கு போறாங்க
April 3, 2018: அப்பாவை எம்எல்ஏ ஆட்கள் அடிக்கிறாங்க
April 3, 2018: போலிஸ் அப்பாவை கைது செய்றாங்க
April 8, 2018: உத்திரப்பிரதேச முதல்வர் யோகி வீட்டுக்கு முன்னாடி அந்த பொண்ணு தற்கொலை செய்ய முயற்சிக்கிறா
April 9, 2018: அப்பா போலிஸ் கஸ்டடியில் இருக்கும் போது கொலை செய்யப்படுறார்
April 10, 2018: போலிஸ் எம்.எல்.ஏ அடி ஆட்கள் 4 பேரை கைது செய்றாங்க. CBIகு கேஸ் மாறுது.
April 13, 2018: அலகாபாத் கோர்ட் எம்.எல்.ஏவை கைது செய்ய உத்தரவு இடுது
11 July 2018: CBI பாலியல் வன்கொடுமைக்கும், அப்பாவோட கொலைக்கும் chargesheet file செய்றாங்க.

18 August, 2018: அப்பாவின் கொலையை பார்த்த witness யூனுஸ் தீடீர்னு இறந்து போறார். போஸ்ட்மார்டம் செய்யாமலே உடலை பலவந்தமா புதைக்குது போலீஸ் .. அவர் மாமா அவர் விஷம் குடுத்து கொல்லப்பட்டதா சொல்றார்.
21st November 2018: அவர் மாமா 18 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயத்துக்காக கைது செய்யப்படுறார்.
26 December 2018: பிறந்த நாள் மாற்றி சொன்னதாக பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் மீதும் 😡 அவ மாமா மேல FIR போடப்படுது.
28th July 2019: மாமாவை பார்க்க ஜெயிலுக்கு போகும் போது, ஒரு நம்பர் ப்ளேட் இல்லாத லாரி இந்த பொண்ணோட கார் மேல மோதுது. பொண்ணு, அவளோட வக்கில் உயிருக்கு போராடிட்டு இருக்காங்க. கூட வந்த 2 அத்தைங்க இறந்திடுறாங்க.
ஆக அப்பா அடிச்சி கொலை, சாட்சி விசம் வைத்து கொலை .. மாமா கைது, அத்தைகள் இறந்திட்டாங்க. Witness கொலை. பொண்ணும் வக்கிலும் உயிருக்கு போராடிட்டு இருக்காங்க....
பிஜேபி எம்எல்ஏ வாக இருந்தால் போதும் யாரையும் கற்பழிக்கலாம் அந்த குடும்பத்தையே கொன்றும் போடலாம் மைலார்டுகளும் விசாரணை அமைப்புகளும் பொத்துனாப்புல டேபிளுக்கு கீழே பர்பியை தேடிக்கொண்டிருக்கும் ... 56 இஞ்சு கேமராவோடு காட்டில் நடித்துக்கொண்டு இருக்கும் ...
Sadhu

கருத்துகள் இல்லை: