வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

சவூதி பெண்கள் ஆண்களின் அனுமதி இன்றி வெளிநாடு செல்லலாம் .. சலுகையாம்

ஆண்களின் ஒப்புதலின்றி பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்-சவுதி அரேபிய அரசாங்கம் அனுமதிதினத்தந்தி : சவுதி அரேபியாவில் உள்ள பெண்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்களின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆண்களின் ஒப்புதலின்றி பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்-சவுதி அரேபிய அரசாங்கம் அனுமதி" ரியாத், இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து வருகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் சென்று பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது. இந்த சூழலில், சவுதி அரேபியாவில் உள்ள பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தங்கள் கணவர், தந்தை அல்லது வேறு ஆண் உறவினர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை இருந்து வந்தது. சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது அந்த விதியை சவூதி அரேபிய அரசாங்கம் நீக்கியுள்ளது.
 21 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும், ஆண்களின் ஒப்புதல் இல்லாமலேயே விண்ணப்பம் சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தங்கள் குடும்பத்து ஆண்களின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணம்செய்யலாம் எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.&

கருத்துகள் இல்லை: