தினகரன : சென்னை: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வைகோ,
மற்றும் திமுக வேட்பாளர்கள் வில்சன், மற்றும் சண்முகம் ஆகியோர் தலைமை
செயலகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனுத்தாக்கல்
செய்தனர். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் தொமுச
சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று
மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழகத்தில் கனிமொழி (திமுக), கே.ஆர்.அர்ஜூனன்
(அதிமுக), வி.மைத்ரேயன் (அதிமுக), ஆர்.லட்சுமணன் (அதிமுக), டி.ரத்தினவேல்
(அதிமுக), டி.ராஜா (சிபிஐ), உள்ளிட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி
காலம் வருகிற 24ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த 6 இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வருகிற 18ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. வருகிற ஜூலை 8ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் மீது ஜூலை 9ம் தேதி பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுவை திருப்ப பெற ஜூலை 11ம் தேதி கடைசி நாள் ஆகும். 6 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் வருகிற 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
மாலை 5 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 6 இடங்களுக்கு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் திமுகவுக்கு 3, அதிமுகவுக்கு 3 இடங்கள் கிடைப்பது உறுதியாகி விட்டது. திமுகவில் ஒரு இடம் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுகிறார். இந்நிலையில் வைகோ மற்றும் திமுக வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை ஸ்டாலின் முன்னிலையில் தாக்கல் செய்தனர். அப்போது துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக