தினத்தந்தி : சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுப்ட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓடவில்லை. இதனால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். ஜூன் மாதம் சம்பளத்தில் 60 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டதால், முழு ஊதியம் வேண்டிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பணி மனையில் இருந்து பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள் மறுத்ததால், குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. வடபழனி, அண்ணாநகர், அம்பத்தூரில் மாநகர பேருந்துகளை பணிமனையில் இருந்து இயக்காமல் நடத்துனர்களும் , ஓட்டுநர்களும் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தால் பேருந்துகள் ஓடவில்லை.
பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர்களுக்கு வழங்க வேண்டிய 40 சதவீத ஊதியம் இன்று மாலைக்குள் வழங்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உறுதி அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக