ஞாயிறு, 30 ஜூன், 2019

பாகிஸ்தானில் இருந்து வந்த உப்பு லாரி.. ரூ.2700 கோடி மதிப்புள்ள ஹெராயின் வீடியோ

tamil.oneindia.com - VelmuruganP.: அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 2700 கோடி ரூபாய் மதிப்புள்ள 532 கிலோ ஹெராயினை பஞ்சாப் மாநில சுங்கத்துறை அதிகாரிகள் அட்டாரி எல்லையில் பறிமுதல் செய்தனர்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எல்லையில் சட்டவிரோதமாக கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறது.அப்படி கடத்தப்படும் போதை பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த சூழலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அட்டாரி-வாகா எல்லையில் சனிக்கிழமை உப்பு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. அந்த லாரியில் உப்பு வித்தியாசமாக தெரியவே போலீசார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அவை அனைத்தும் ஹெராயின்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 532 சாக்கு மூட்டைகளில் இருந்த ஹெராயின்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ 2700 கோடி என சுஙகத்துறை கமிஷ்னர் தீபக்குமார் குப்தா தெரிவித்தார.

பஞ்சாப்பில் சுமார் 532 கிலோ ஹெராயின் மற்றும் 52 கிலோ சந்தேகத்திற்கிடமான கலப்பு போதைப்பொருளை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவற்றை அமிர்தசரஸில் உள்ள வியாபாரி ஒருவர் இறக்குமதி செய்துள்ளதாகவும், சர்வதே போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சுஙகத்துறை கமிஷ்னர் தீபக்குமார் குப்தா தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: