வெள்ளி, 5 ஜூலை, 2019

சிகாகோ உலகத் தமிழ் மாநாட்டு நிதி உதவியை முடக்கிய பாஜக அரசு


சாவித்திரி கண்ணன் : ரொம்பவும் மகிழ்ச்சியாகத் தான் அறிவித்தார் ரூபாய் 5 கோடியை உலகத் தமிழ் மாநாட்டிற்கு தருவதாக எடப்பாடியார்!
அந்தோ பரிதாபம் ! மத்திய அரசின் விருப்பமின்மையாலும், தடையாலும் தற்போது ஒரு கோடியை மட்டுமே கொடுக்க முடிந்துள்ளது.
எனவே, இந்த ’ஒரு கோடி’ அறிவிப்பை தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் மூலமாக அறிவிக்கச் செய்துள்ளார்!
அமெரிக்காவில் வாழும் தெலுங்கர்கள் மாநாடு நடத்தும் போது ஆந்திர அரசு உதவி வருவதை ஏன் தடுக்க முடிவதில்லை.... பா ஜ க அரசால்?
இது போல வேறு எந்த மாநில அரசின் சொந்த விவகாரத்திலாவது மத்திய அரசு தலையிட்டு சண்டியர்த் தனம் செய்ய முடியுமா?
இந்த அற்பத் தனமான செயல் மூலமாக பா ஜா க அரசு ஒரு தமிழ்,மற்றும் தமிழர் விரோத அரசு என்பதை மெய்பித்துவிட்டதாக நாம் கருதுவதற்கு இடமளித்துவிட்டதே...!
இந்த விஷயத்தில் தமிழக பா ஜா கவினராவது மத்திய அரசிற்கு எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும்.

தமிழ் மொழியின் தொன்மையை இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக பார்க்கும் மன நிலை பாஜ கவின் மத்திய தலைமைக்கு வரவில்லை என்றால்,
கிழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பழம் பொருட்கள் சுமார் 1300 சொச்சம் இந்திய தொன்மை கலாச்சாரத்தின்- தன் நிகரற்ற விலை மதிப்பில்லா செல்வங்கள் - என்று கருதமுடியாவிட்டால்..,
பாஜகஅரசானது எப்படி அனைத்து இந்தியர்களுக்குமானதாகிவிட முடியும்?
5 கோடியை தடுத்துவிட்டதன் முலமாக பா ஜ க அரசு ஏற்படுத்தியுள்ள அவநம்பிக்கையை, இனி வருங்காலங்களில் 5,000 கோடியை செலவழித்தாலும் கூட மீட்டெடுக்க முடியாதே?

கருத்துகள் இல்லை: