nakkheeran.in - kathiravan :
17-வது மக்களவை தேர்தல் 7
கட்டங்களாக நடைபெறும் என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது என்றும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்றும், தேர்தல் விதிமீறல்கள் குறித்து ஆண்ட்ராய்டு ஆப் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும், புகார் அளிப்போரின் விபரம் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் சுனில் அரோரா அறிவித்தார்.
பணம் தந்து செய்திகள் வெளியிடுவதை கண்காணிக்க அனைத்து பகுதிகளிலும் குழு அமைக்கப்படுகிறது . சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டது. அரசியல் தொடர்பான விளம்பரங்களை இணையதளத்தில் வெளியிட முன்னனுமதி பெற வேண்டும் என்றும் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக