செவ்வாய், 12 மார்ச், 2019

இவர்களின் முதல் ஆசை பெண்கள்தான்; பின்னர் ரூட்டை மாற்றினர்!’


thirunavukkarasu_14312_15313 `இவர்களின் முதல் ஆசை பெண்கள்தான்; பின்னர் ரூட்டை மாற்றினர்!' பொள்ளாச்சி கும்பல் விவகாரத்தில் அதிர்ச்சி- வீடியோ `இவர்களின் முதல் ஆசை பெண்கள்தான்; பின்னர் ரூட்டை மாற்றினர்!' பொள்ளாச்சி கும்பல் விவகாரத்தில் அதிர்ச்சி- வீடியோ thirunavukkarasu 14312 15313விகடன் : நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் படு பிஸியாக இருக்கின்றன. ஆனால், பொள்ளாச்சியில் பெண்களை பயன்படுத்தி, பணம் பறிக்கும் கும்பலால் பல குடும்பங்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் கிடக்கிறார்கள்.
`இவர்களின் முதல் ஆசை பெண்கள்தான்; பின்னர் ரூட்டை மாற்றினர்!’ பொள்ளாச்சி கும்பல் விவகாரத்தில் அதிர்ச்சி- வீடியோ200 பெண்கள், 50 வீடியோக்கள், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் தொடர்பு என்று இந்த வழக்கின் ஒவ்வொரு தகவலும் நம்மைப் பதைபதைக்க வைக்கின்றன. இன்றையே தேதிக்கு, சமூக வலைதளங்கள் மற்றும் செல்போன் இல்லாதவர்கள் மிகவும் குறைவு. அதைத் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்தியிருக்கிறது கைது செய்யப்பட்டுள்ள கும்பல். பொள்ளாச்சி கும்பல் இதைப்பற்றி போலீஸ் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று அனைத்துத் தரப்பிலும் விசாரித்தோம்.
“இந்தக் கும்பல் குறித்து தற்போதுதான் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. ஊடகங்களில் வெளி வராத செய்திகள் ஏராளம். டிப் டாப்பாக உடை அணிந்துகொண்டு, சரக்கடித்துவிட்டு ஜாலியாக ஊரைச் சுற்றும் இளைஞர்கள் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்துக் கொண்டிருந்தோம்.

இதில், முக்கிய குற்றவாளியாக கூறப்படும் திருநாவுக்கரசு ஃபைனான்சியர். எனவே, தொடக்கத்தில் இவர்களுக்கு பணத்தாசை எல்லாம் இல்லை நாளடைவில், பல பெரிய புள்ளிகளின் தொடர்பு கிடைத்துள்ளது. அதுவரை, பெண்களுடன் உல்லாசமாக மட்டும் இருக்க வேண்டும் என்று நினைத்தவர்களின், ரூட் பணத்தை நோக்கி மாறியுள்ளது.
சமூக வலைதளங்கள் மட்டுமல்ல, பெண்களைக் கவர பல்வேறு வழிகளை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் தங்களது தங்கைகள் மூலமாக மாணவிகளுடன் அறிமுகம் ஆவார்கள். ஒரு சிலரின் தங்கைகள், சக மாணவிகளின் கைப்பேசி நம்பர் வரை தந்துவிடுவார்கள். தற்போது, புகார் தெரிவித்துள்ள பெண்ணின், அண்ணனுக்கு, இந்த கேங்கில் சிலர் நண்பர்களாக இருந்துள்ளனர். முதலில், அந்த அண்ணனின் செல்போனில் இருந்துதான், சம்பந்தப்பட்ட பெண்ணின் நம்பரை எடுத்திருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த கேங்கை தானாகவே தேடி வந்தப் இரையான பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சமீபத்தில், சென்னையில் இருந்து டாக்டர் பெண்மணி ஒருவர், ஒரு நாள் என்ஜாய் செய்வதற்கு வந்து, பிறகு ஒரு வாரம் இவர்களுடன் தங்கியுள்ளார்.
ஆனால், இந்தக் கும்பல் ஏமாற்றிய நகை, பணம் குறித்த தகவல்கள் விவரம் வெளிவரவில்லை.
ஆளுங்கட்சி பிரமுகர்களின் வாரிசுகளுக்கு இவர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால்தான், இந்த விஷயத்தை அவர்கள், திருநாவுக்கரசுடன் ஆஃப் செய்யப் பார்க்கிறார்கள். நேர்மையாக விசாரித்தால்தான், இதன் முழு விவரங்கள் தெரியவரும்” என்றனர். இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சதீஸ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய மூன்று பேருக்கு, 15 நாள்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றக் காவலில் இருப்பவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டுவிட்டது. இந்த வழக்கில் வெளியில் இருக்கும் குற்றவாளிகளை என்ன செய்யப் போகிறார்கள்?

கருத்துகள் இல்லை: