இந்தியா - 0.26 டாலர்
கிர்கிஸ்தான் - 0.27 டாலர்
கஜகஸ்தான் -0.49 டாலர்
உக்ரேன் - 0.51 டாலர்
ருவாண்டா -0.56 டாலர் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நாடுகள் எவை?
ஜிம்பாபேவே - 75.20 டாலர் ஈகுவடோரியல் கினி - 65.83 டாலர் செயின்ட் ஹெலெனா - 55.47 டாலர் பாஃல்க்லாண்ட் தீவு - 47.39 டாலர் ட்ஜிபூட்டி - 37.92 டாலர்கள்
tamiloneindia : உலக அளவில் மக்கள் செல்பேசி டேட்டாவுக்காக எவ்வளவு செலவிடுகிறார்கள் என்பது குறித்த ஓர் ஆய்வில் ஐரோப்பாவில்தான் மக்கள் டேட்டாவுக்கு அதிகம் செலவு செய்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணம் மிக அதிகம். அங்கே சராசரியாக ஒரு ஜிபிக்கு $12.37 செலவு செய்ய வேண்டியுள்ளது.
இந்த முடிவுகள் ஏமாற்றத்தை தருவதாக கேபிள் டெலிகாமின் பகுப்பாய்வாளர் டான் ஹௌடல் தெரிவிக்கிறார்.
''பிரிட்டன் போன்ற நாடுகளில் ஆரோக்கியமான சந்தை இருக்கிறது. இருப்பினும் ஐரோப்பாவில் உள்ள ஃபின்லாந்து, போலந்து, டென்மார்க், இத்தாலி, ஆஸ்திரியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பிரிட்டனில் ஒரு ஜிபிக்கு ஆகும் கட்டணத்தைவிட குறைவான விலையை கொண்டிருக்கின்றன. பிரெக்சிட்டுக்கு பிறகு பிரிட்டனில் ஒரு ஜிபி என்ன கட்டணமாகும் என்பது தெரியவில்லை. அதுவொரு சுவாரஸ்யமான விஷயமாக இருக்கக்கூடும்'' என்கிறார் டான் ஹௌடல். .
உலகில் 230 நாடுகளில் செல்பேசி டேட்டாவுக்கு எவ்வளவு கட்டணம் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து கூறுகிறது இந்த ஆய்வு. இதில் பிரிட்டன் 136-வது இடத்தில் உள்ளது. ஒரு ஜிபி உலக அளவில் சராசரியாக $8.53க்கு விற்கப்படுகிறது .
கிழக்கு ஐரோப்பாவில் ஃபின்லாந்தில்தான் ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணம் மலிவாக கிடைக்கிறது. அங்கே ஒரு ஜிபி டேட்டாவை 1.16 டாலருக்கு பெற்றுவிடலாம். இத்தாலி, டென்மார்க், மொனாகோ போன்றவற்றில் இரண்டு டாலருக்கும் குறைவான விலையில் ஒரு ஜிபி கிடைக்கும். மேற்கு ஐரோப்பாவில் போலந்தில் ஒரு ஜிபியின் கட்டணம் 1.32 டாலர்கள். ருமேனியாவில் 1.89 டாலர்கள்.
இப்பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் நாடு எது?
இந்தியா - 0.26 டாலர்
கிர்கிஸ்தான் - 0.27 டாலர்
கஜகஸ்தான் -0.49 டாலர்
உக்ரேன் - 0.51 டாலர்
ருவாண்டா -0.56 டாலர்
பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நாடுகள் எவை?
ஜிம்பாபேவே - 75.20 டாலர்
ஈகுவடோரியல் கினி - 65.83 டாலர்
செயின்ட் ஹெலெனா - 55.47 டாலர்
பாஃல்க்லாண்ட் தீவு - 47.39 டாலர்
ட்ஜிபூட்டி - 37.92 டாலர்கள்
டேட்டா கட்டணங்கள்
செல்பேசி டேட்டாவின் விலை இருப்பதிலேயே மிக அதிகமாக விற்கப்படும் நாடு ஜிம்பாப்வே. அங்கு ஒரு ஜிபி டேடாவின் கட்டணம் சுமார் 75.20 டாலர் ஆகும்.
ஆப்பிரிக்காவை பொருத்தவரை சில நாடுகளில் அதிகமாகவும், சில நாடுகளில் விலை குறைவாகவும் இருக்கிறது. ருவாண்டா, சூடான், மற்றும் காங்கோ போன்ற நாடுகளில் டேட்டாவின் கட்டணம் ஒரு டாலருக்கும் குறைவாக இருக்கிறது. ஆனால், ஈக்வடோரியல் கினி, கயனா மற்றும் செயின்ட் ஹெலினா போன்ற நாடுகளில் ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணம் 50 டாலருக்கும் அதிகமாக இருக்கிறது.
டேட்டாவின் கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் ஆசிய நாடுகளாகும். தைவான், சீனா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில், உலகளாவிய சராசரியை விட சற்று அதிக கட்டணம் உள்ளன.
உலகில் இவ்வாறு டேட்டாவின் கட்டணத்தில் பெரும் வேறுபாடுகள் இருப்பதற்கான காரணங்களை கூறுவது சிக்கலானது என்கிறார் ஹௌடல்.
"சில நாடுகளில் மிகச் சிறந்த செல்பேசி மற்றும் அகன்ற அலைவரிசை (ப்ராட்பாண்ட்) உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அதனால் டேட்டா சேவை வழங்குபவர்களால் பெரும் அளவிலான டேட்டா வழங்கப்படுவது, ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணம் குறைக்கிறது. மற்ற நாடுகளில் மேம்பட்ட அகன்ற அலைவரிசை (ப்ராட்பாண்ட்) சேவைகள் இல்லாததால், செல்பேசி டேட்டாவை சார்ந்தே இருக்கின்றன. மக்கள் அதனை பயன்படுத்த வேண்டுமானால், கட்டணம் குறைவாக இருக்க வேண்டும் என்ற நிலை உருவாகிறது" என்று அவர் தெரிவித்தார்.
"உள்கட்டமைப்பு பெரிதாக இல்லாமல், குறைந்த அளவிலான மக்களே டேட்டாவை பயன்படுத்தும் நாடுகளில் அதன் விலை மிக அதிகமாக இருக்கிறது. மக்கள் சில மெகாபைட்டுகள் அளவிற்கு மட்டுமே டேட்டாவை வாங்குவதால், கிகா பைட்டுகளின் விலை மிக அதிகமாகிறது."
சிம் மட்டுமே சார்ந்து சேவை வழங்குபவர்களின் கட்டணத்தை வைத்தே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
கிர்கிஸ்தான் - 0.27 டாலர்
கஜகஸ்தான் -0.49 டாலர்
உக்ரேன் - 0.51 டாலர்
ருவாண்டா -0.56 டாலர் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நாடுகள் எவை?
ஜிம்பாபேவே - 75.20 டாலர் ஈகுவடோரியல் கினி - 65.83 டாலர் செயின்ட் ஹெலெனா - 55.47 டாலர் பாஃல்க்லாண்ட் தீவு - 47.39 டாலர் ட்ஜிபூட்டி - 37.92 டாலர்கள்
tamiloneindia : உலக அளவில் மக்கள் செல்பேசி டேட்டாவுக்காக எவ்வளவு செலவிடுகிறார்கள் என்பது குறித்த ஓர் ஆய்வில் ஐரோப்பாவில்தான் மக்கள் டேட்டாவுக்கு அதிகம் செலவு செய்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
Cable.co.uk எனும்
இணையத்தளத்தில் ஒரு கிகா பைட் அளவிலான டேட்டாவுக்கு ஒவ்வொரு நாட்டிலும்
எவ்வளவு செலவாகிறது எனது குறித்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவில் மிகக்குறைவான விலையில் டேட்டா கிடைப்பது
தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஒரு ஜிபி டேட்டா $0.26 கட்டணத்திற்கு
கிடைக்கிறது. அதுவே பிரிட்டனில் $6.66 என்ற கட்டணத்திற்கு கிடைக்கிறது. அமெரிக்காவில் ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணம் மிக அதிகம். அங்கே சராசரியாக ஒரு ஜிபிக்கு $12.37 செலவு செய்ய வேண்டியுள்ளது.
இந்த முடிவுகள் ஏமாற்றத்தை தருவதாக கேபிள் டெலிகாமின் பகுப்பாய்வாளர் டான் ஹௌடல் தெரிவிக்கிறார்.
''பிரிட்டன் போன்ற நாடுகளில் ஆரோக்கியமான சந்தை இருக்கிறது. இருப்பினும் ஐரோப்பாவில் உள்ள ஃபின்லாந்து, போலந்து, டென்மார்க், இத்தாலி, ஆஸ்திரியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பிரிட்டனில் ஒரு ஜிபிக்கு ஆகும் கட்டணத்தைவிட குறைவான விலையை கொண்டிருக்கின்றன. பிரெக்சிட்டுக்கு பிறகு பிரிட்டனில் ஒரு ஜிபி என்ன கட்டணமாகும் என்பது தெரியவில்லை. அதுவொரு சுவாரஸ்யமான விஷயமாக இருக்கக்கூடும்'' என்கிறார் டான் ஹௌடல். .
உலகில் 230 நாடுகளில் செல்பேசி டேட்டாவுக்கு எவ்வளவு கட்டணம் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து கூறுகிறது இந்த ஆய்வு. இதில் பிரிட்டன் 136-வது இடத்தில் உள்ளது. ஒரு ஜிபி உலக அளவில் சராசரியாக $8.53க்கு விற்கப்படுகிறது .
கிழக்கு ஐரோப்பாவில் ஃபின்லாந்தில்தான் ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணம் மலிவாக கிடைக்கிறது. அங்கே ஒரு ஜிபி டேட்டாவை 1.16 டாலருக்கு பெற்றுவிடலாம். இத்தாலி, டென்மார்க், மொனாகோ போன்றவற்றில் இரண்டு டாலருக்கும் குறைவான விலையில் ஒரு ஜிபி கிடைக்கும். மேற்கு ஐரோப்பாவில் போலந்தில் ஒரு ஜிபியின் கட்டணம் 1.32 டாலர்கள். ருமேனியாவில் 1.89 டாலர்கள்.
இப்பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் நாடு எது?
இந்தியா - 0.26 டாலர்
கிர்கிஸ்தான் - 0.27 டாலர்
கஜகஸ்தான் -0.49 டாலர்
உக்ரேன் - 0.51 டாலர்
ருவாண்டா -0.56 டாலர்
பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நாடுகள் எவை?
ஜிம்பாபேவே - 75.20 டாலர்
ஈகுவடோரியல் கினி - 65.83 டாலர்
செயின்ட் ஹெலெனா - 55.47 டாலர்
பாஃல்க்லாண்ட் தீவு - 47.39 டாலர்
ட்ஜிபூட்டி - 37.92 டாலர்கள்
டேட்டா கட்டணங்கள்
செல்பேசி டேட்டாவின் விலை இருப்பதிலேயே மிக அதிகமாக விற்கப்படும் நாடு ஜிம்பாப்வே. அங்கு ஒரு ஜிபி டேடாவின் கட்டணம் சுமார் 75.20 டாலர் ஆகும்.
ஆப்பிரிக்காவை பொருத்தவரை சில நாடுகளில் அதிகமாகவும், சில நாடுகளில் விலை குறைவாகவும் இருக்கிறது. ருவாண்டா, சூடான், மற்றும் காங்கோ போன்ற நாடுகளில் டேட்டாவின் கட்டணம் ஒரு டாலருக்கும் குறைவாக இருக்கிறது. ஆனால், ஈக்வடோரியல் கினி, கயனா மற்றும் செயின்ட் ஹெலினா போன்ற நாடுகளில் ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணம் 50 டாலருக்கும் அதிகமாக இருக்கிறது.
டேட்டாவின் கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் ஆசிய நாடுகளாகும். தைவான், சீனா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில், உலகளாவிய சராசரியை விட சற்று அதிக கட்டணம் உள்ளன.
உலகில் இவ்வாறு டேட்டாவின் கட்டணத்தில் பெரும் வேறுபாடுகள் இருப்பதற்கான காரணங்களை கூறுவது சிக்கலானது என்கிறார் ஹௌடல்.
"சில நாடுகளில் மிகச் சிறந்த செல்பேசி மற்றும் அகன்ற அலைவரிசை (ப்ராட்பாண்ட்) உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அதனால் டேட்டா சேவை வழங்குபவர்களால் பெரும் அளவிலான டேட்டா வழங்கப்படுவது, ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணம் குறைக்கிறது. மற்ற நாடுகளில் மேம்பட்ட அகன்ற அலைவரிசை (ப்ராட்பாண்ட்) சேவைகள் இல்லாததால், செல்பேசி டேட்டாவை சார்ந்தே இருக்கின்றன. மக்கள் அதனை பயன்படுத்த வேண்டுமானால், கட்டணம் குறைவாக இருக்க வேண்டும் என்ற நிலை உருவாகிறது" என்று அவர் தெரிவித்தார்.
"உள்கட்டமைப்பு பெரிதாக இல்லாமல், குறைந்த அளவிலான மக்களே டேட்டாவை பயன்படுத்தும் நாடுகளில் அதன் விலை மிக அதிகமாக இருக்கிறது. மக்கள் சில மெகாபைட்டுகள் அளவிற்கு மட்டுமே டேட்டாவை வாங்குவதால், கிகா பைட்டுகளின் விலை மிக அதிகமாகிறது."
சிம் மட்டுமே சார்ந்து சேவை வழங்குபவர்களின் கட்டணத்தை வைத்தே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக