செவ்வாய், 12 மார்ச், 2019

திமுக 2 தேர்தல் அறிக்கைகள் வெளியிடுகிறது.. தாய்மார்களுக்கு 6 மாதத்திற்கு தினமும் 1 லிட்டர் பால் இலவசம்?

.nakkheeran.in இரா. இளையசெல்வன்:
Anna-arivalayamதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைத்து கட்சிகளிடத்திலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் அதிமுக, திமுக கட்சிகள் கவனம் செலுத்தி வரும் அதே வேளையில், தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் தீவிரம் காட்டி வருகின்றன.
 இது ஒரு புறமிருக்க, ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் அறிக்கைகள் பல தாக்கங்களை ஏற்படுத்துவதால் தேர்தல் அறிக்கைகள் மீதும் அதீத கவனம் செலுத்துகின்றன பிரதான அரசியல்கட்சிகள். இந்த  நிலையில், திமுகவில் 2 தேர்தல் அறிக்கைகள் வெளியிடவிருப்பதாக  தகவல்கள் கசிகின்றன.

நாடாளுமன்ற தேர்தலும், தமிழக சட்டமன்றத்திற்குட்பட்ட 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடக்கின்றன. இதனை மையப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு ஒரு தேர்தல் அறிக்கையும், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...' என்கிற தலைப்பில் இடைதேர்தலுக்காக ஒரு தேர்தல் அறிக்கையும் என 2 தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும் என கட்சி தலைமைக்கு சமீபத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது.


அதன்படி 2 அறிக்கைகளை திமுக வெளியிட வாய்ப்பு அதிகம். இடைத்தேர்தலுக்காக வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில் பேருந்து கட்டணத்தை குறைத்தல், மின் கட்டண கணக்கெடுப்பினை (ரீடிங்) மாதந்தோறும் எடுத்தல், குழந்தை பெறும் தாய்மார்களுக்கு 6 மாதத்திற்கு தினமும் 1 லிட்டர் பால் இலவசம் உள்ளிட்ட பல அறிவிப்புகளை செய்யவிருக்கிறது திமுக  என தகவல்கள் கிடைக்கின்றன்.

இத்தகைய தேர்தல் அறிவிப்புகள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்புடன் அறிக்கை தயாரிப்பில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் கவனம் செலுத்தியிருப்பதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை: