செவ்வாய், 12 மார்ச், 2019

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்!
பொள்ளாச்சி பாலியல் கொடூரம்... வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்...!tamil.news18.com: தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தின் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ளது. அதில், பாதிக்கப்பட்ட ஒரு பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனையடுத்து, இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, காவல்துறை நான்கு பேரை கைது செய்தது. இந்தநிலையில், இந்தக் கும்பல் இளம் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்யும் ஓரிரு நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ வெளியானது. அந்த வீடியோ தமிழ்நாட்டைக் கொந்தளிக்கச் செய்தது.


இந்த வழக்கில் கைதான 3 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்த நிலையில் 3 பேரும் பொள்ளாச்சி ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 25-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.

ஆபாச வீடியோ வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் திருநாவுக்கரசு கடந்த 5-ந் தேதி கைது செய்யப்பட்டார். திருநாவுக்கரசுவுக்கு ஜாமின் கேட்டு அவரது தாயார் லதா பொள்ளாச்சி ஜே.எம்.1., கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கருத்துகள் இல்லை: