புதன், 29 நவம்பர், 2017

செவிலியர்கள் போராட்ட களத்தில் கனிமொழி: கர்ப்பிணி செவிலியர்கள் வரிசையில் நிர்கிஆரக்ல


மின்னம்பலம்: கழிப்பறையை பயன்படுத்த கர்ப்பிணி செவிலியர்கள் வரிசையில் நிற்கின்றனர்: கனிமொழி!
செவிலியர்கள் போராட்டம் நடந்து வரும் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், செவிலியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று சந்தித்தார். >பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,ரூ.7,000 மாத சம்பளத்தை வைத்துக் கொண்டு செவிலியர்களால் என்ன செய்ய முடியும்? பிற மாநிலங்களில் செவிலியர்களுக்கு பல மடங்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. செவிலியர்களின் நியாமான கோரிக்கைகள் நிறைவற்றப்பட வேண்டும். 2 மணி நேரமாக கழிப்பறையை பயன்படுத்த கர்ப்பிணி பெண்கள் வரிசையில் நிற்கின்றனர். இது தான் உள்ளே இருக்கும் சூழல். செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் முன்வர வேண்டும்.
அரசானது மக்களின் எந்த பிரச்சனையையும் புரிந்துகொள்ள தயாராக இல்லை. தன்னை தக்க வைத்து கொள்ளும் ஒரு அரசாக மட்டும் தான் இந்த அரசு இருக்கிறது. டெல்லியில் இருப்பவர்கள் கூறுவதை தான் கேட்கிறார்கள். அது மட்டும் தான் அவர்கள் காதுகளில் கேட்கிறது. மக்கள் கூறுவது எதுவும் அவர்கள் காதுகளில் கேட்பதில்லை. அதனால் தான் செவிலியர்களின் போராட்டத்தை மு.க.ஸ்டாலின் ஆதரித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து கண்டிப்பாக திமுக கோரிக்கை எழுப்பும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.>படம் - அசோக்குமார்

கருத்துகள் இல்லை: