திங்கள், 27 நவம்பர், 2017

அம்ருதா ஜெயலலிதாவின் மகள்? உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யுமாறு கோருகிறார்

நக்கீரன் : பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண். மறைந்த ஜெயலலிதாவின் மகளாகப் பிறந்ததாகவும். ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி என்பவர் பிரசவம் பார்த்தார் எனவும், ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால், இந்த உண்மையை வெளிப்படுத்தப்படவில்லை என்றும்  தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் வாரிசு  எனவும் தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரியும் வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு  இறுதிச்சடங்கு செய்யவேண்டும் என்றும் அம்ருதா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டை அணுகாமல் நேரடியாக  நீங்கள் சுப்ரீம் கோர்ட்டை நாடியது ஏன் என கேள்வி எழுப்பினர். அம்ருதாவுக்காக ஆஜரான வக்கீல் பாதுகாப்பு காரணங்களுக்காக தாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளதாக கூறினார். இதை தொடர்ந்து கர்நாடக ஐகோர்ட்டை அணுகுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் அவரது மனுவை தள்ளுபடி  செய்தனர்.
<;">ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கு அம்ருதா ஏற்கனவே இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,
;கடந்த 1960-ம் ஆண்டு பிரபல நடிகையாக இருந்த என் பாட்டி சந்தியா- ஜெயராம் தம்பதியின் 3 பிள்ளைகளில் என் தாய், ஜெயலலிதா என்கிற கோமளவள்ளியும் ஒருவர். அவர் மகள் தான் நான். என் பெயர் மஞ்சுளா என்கிற அம்ருதா. அம்மு என்றும் என்னை செல்லமாக அழைப்பர். பெற்றோரை இழந்த பின் என் தாய் மன அழுத்தத்துக்கு ஆளானார். அப்போது தெலுங்கு நடிகர் சோபன்பாபு என் தாய் மீது அதிக அக்கறை காட்டினார். அவர் பராமரிப்பில் என் தாயார் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார். அவர்கள் இடையிலான நட்பு காதலாக மாறியது. இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். திருமணம் செய்ய முடிவு செய்தனர். சோபன்பாபுவின் முதல் மனைவியின் எதிர்ப்பால், திருமணம் நின்று போனது

கர்ப்பமாக இருந்த என் தாய், 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி என்னை பெற்றெடுத்தார். சம்பிரதாயமிக்க குடும்பம் என்பதால் ஜெயலலிதா, சோபன்பாபு உறவை ஏற்க எங்கள் குடும்பத்தினர் மறுத்தனர். இதனால் தன் குழந்தையை தன் சகோதரி சைலஜாவிடம் என் தாய் ஒப்படைத்தார். பெங்களூருவில் பணியாற்றி வந்த சைலஜா-சாரதி தம்பதியினர் என்னை சொந்த மகளாகவே வளர்த்து வந்தனர். ஆனால், ஜெயலலிதாவின் மகள் என்ற ரகசியத்தை எங்கும் கூறவில்லை. அவர்களிடம் ஜெயலலிதா சத்தியம் வாங்கியுள்ளதாக தெரிகிறது.



1996-ல் என்னிடம் ஒரு சீட்டு எழுதி கொடுத்த சைலஜா சென்னை சென்று ஜெயலலிதாவை சந்தித்து வரும்படி கூறினார். நானும், போயஸ் கார்டனுக்கு சென்று அவரை சந்தித்தேன். என்னை பார்த்தவுடன் வாரி அணைத்து பாசத்தை காட்டி உபசரித்தார். இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அதன் பின் பலமுறை அவரை சந்தித்தேன். ஆனால் ஒரு முறை கூட என் சொந்த தாய் என்று கூறியதில்லை. எந்த காரணத்தினாலும் அரசியலுக்கும், சினிமாவுக்கும் வரவேண்டாம் என என்னை எச்சரித்திருந்தார்.<10pt>ஜெயலலிதா இறந்த பின் தீபா, தீபக் ஆகியோர் தான் என் அம்மாவின் சொத்துக்கு வாரிசுதாரர்கள் என செய்தி வெளியானது. இதை பார்த்த அமெரிக்காவில் உள்ள என் உறவினர் ஜெயலட்சுமி, ஜெயலலிதாவின் ஒரே மகள் நான் தான் என்பதை என்னிடம் கூறினார். 
<10pt>பசவனகுடியில் வசிக்கும் மற்றொரு உறவினர் லலிதாவும், இவ்வி‌ஷயத்தை உறுதிபடுத்தினார். நான் பிறந்தபோது ரஞ்சினி ரவீந்திரநாத், லலிதா ஆகியோரும் என் தாயாரை பராமரித்துள்ளனர்.

<10pt>அவர்களுக்கு என் பிறப்பு ரகசியம் தெரிந்துள்ளது. ஜெயலலிதாவின் இறப்பு இயற்கையான மரணம் அல்ல. உடல் நிலை பாதிப்பாலும் அவர் இறக்கவில்லை. 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி ஜெயலலிதா தாக்கப்பட்டுள்ளார். எனவே, சசிகலா நடராஜன், தினகரன், தீபக் ஜெயகுமார், ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும்.

<10pt>என் தாய் ஜெயலலிதா இறப்புக்கு சசிகலா உள்பட பலரும் காரணம். இது தொடர்பாக உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ., சிறப்பு குழு விசாரணை நடத்த வேண்டும். இறப்பின் காரணத்தை தெரிந்து கொள்ள அவர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். என் தாய், அவர் தான் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. என்னும் மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் மஞ்சுளா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: