புதன், 29 நவம்பர், 2017

செவிலியர் கோரிக்கைகள் ,,,, வேலை பிடிக்காவிட்டால் விலகி போ என்று நீதிமன்றம் கூறலாமா?

நக்கீரன்: அரசு மருத்துவ மனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 9990 நர்சுகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.7700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வும் ஆண்டுக்கு ரூ.500 வீதம் வழங்கப்படுகிறது. மருத்துவ தேர்வு வாரியம் மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் நியமிக்கப்பட்ட இவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் புதன்கிழமை மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போராட்டம் குறித்து மருத்துவ தேர்வு வாரிய செவிலியர்கள் நலச் சங்கத்தின் துணைத் தலைவர் அரசு மணி கூறியதாவது..
டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி. மூலம் எப்படி பணிக்கு தேர்ந்தெடுத்து முழு ஊதியம் வழங்குகிறார்களோ, அதேபோல் மருத்துவ தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுக்கும் முழு ஊதியம் வழங்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம். எங்களது கோரிக்கைகள் அனைத்தும் அரசு நடைமுறையில் இருப்பதுதான். மருத்துவ தேர்வு வாரியம் மூலம் 25 வகையான பணியாளர்களை எடுத்துள்ளனர். அதில் மருத்துவர்கள் உள்பட 24 வகையான பணியாளர்களுக்கு எந்த தேதியில் பணியில் சேர்ந்தார்களோ, அந்த நாளில் இருந்து முழு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் செவிலியர்களை மட்டும் தொகுப்பு ஊதியத்தில் வைத்துள்ளனர். இதனை மருத்துவ தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பார்க்கலாம்.

எங்களுக்கு உதவியாளராக 8வது படித்தவர்களைத்தான் தேர்வு செய்கிறார்கள். ஆனால், அவர்கள் பணியில் சேர்ந்த உடனேயே வாங்கும் முழு ஊதியம் 21 ஆயிரம் ரூபாய். 3 வருட டிப்ளமோ, 4 வருட டிகிரி, அதனைத் தொடர்ந்து 2 வருட எம்எஸ்சி என 6 வருடம் படித்த எங்களுக்கு 7700 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு என்று சில இடங்களில் மட்டுமே கொடுக்கிறார்கள். சில இடங்களில் கொடுப்பதில்லை. இதுதான் சார் உண்மை. நாங்கள் எங்கள் உரிமையைத்தான் சார் கேட்கிறோம். இப்படித்தான் சம்பளம் கொடுப்பேன் என்று சொன்னால், ஒட்டுமொத்தமாக செவிலியர்கள் அனைவரையுமே இழிவுப்படுத்துவதுபோல இல்லையா.

முறையாக எங்களுக்கு 7வது ஊதிய கமிசன் போடுவதற்கு முன்பு 34 ஆயிரம் ரூபாய் வரவேண்டும். 7வது ஊதிய கமிசன் போட்ட பின்னர் 44 ஆயிரம் ரூபாய் வரவேண்டும். இதுதான் எங்களது முதன்மையான கோரிக்கை. எங்களுடைய இந்த நியாயமான கோரிக்கையை ஏற்க முடியாது என்று தமிழக அரசு பிடிவாதம் பிடிக்கிறது.

எங்களை அரசு ஊழியர்களே இல்லை என்று சொல்கிறார்கள். நேஷ்னல் ரூரல் ஹெல்த் மிஷன் (NRHM) ஊழியர்கள் என்கிறார்கள். NRHM என்ற அமைப்புக்கு தனி இயக்குனரகம் இருக்கிறது. அதன் டைரக்டர் மூலமாக விளம்பரம் கொடுத்து, அவர்களே ஆட்களைத் தேர்வு செய்து பணி ஆணை கொடுப்பார்கள். அது தற்காலிக பணி ஆணை. மற்ற மாநிலங்களில் அப்படித்தான் கொடுத்து வருகின்றனர்.<

கருத்துகள் இல்லை: