புதன், 29 நவம்பர், 2017

அன்புசெழியனும் சீமானும் ,,, இங்க நீங்க நல்லா புரிஞ்சிக்கோணும்

-Ganesh Babu :கந்துவட்டி' அன்புசெழியனுக்கு ஆதரவாக புதிய தலைமுறையில் சீமான் நேர்காணலைப் பார்த்தேன். அசோக் குமாரின் மரணம் வருத்தமளிக்கிறது என்று ஒப்புக்கு பதிவு செய்துவிட்டு, அதன்பிறகு தொடர்ந்து 'அன்புசெழியன் போன்றவர்கள் இல்லாமல் சினிமாத்துறையே இயங்காது', 'வட்டி விகிதங்களை தெரிந்துக்கொண்டுதானே கடன் வாங்குகிறோம்', 'அன்புசெழியன் பலருக்கு உதவியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்' என்று வெவ்வேறு வார்த்தைகளில் முக்கி முக்கி அன்புசெழியனை நியாயப்படுத்திக்கொண்டிருந்தார். மேலும், "நான் களநிலவரத்தை, யதார்த்தத்தைச் சொல்கிறேன்" என்றும் அடிக்கடி சொன்னார். உண்மையிலேயே ஆச்சர்யமாக இருந்தது.
'கலைஞர் நினைத்தால் ஈழப்படுகொலையை நிறுத்தியிருக்கலாம்', 'தமிழக மீனவர்கள் தாக்கப்படாமல் இருக்க அவர்களோடு ஆயுதமேந்திய வீரர்களை அனுப்புவேன்', 'பிரபாகரன் இடத்தில் நான் இருந்திருந்தால் என்றோ ஈழம் மலர்ந்திருக்கும்', 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்',
'என் ஆட்சியில் ஆடு-மாடு மேய்ப்பவர்கள் அரசுப் பணியாளர்களாக்கப்படுவார்கள்' இப்படி நடைமுறைக்குத் துளியும் சாத்தியமில்லாத utopian விசயங்களை மட்டுமே எப்போதும் உளறிக்கொட்டி ஊரை ஏமாற்றும் சீமான் இப்படி அன்புசெழியனுக்கு ஆதரவாக யதார்த்தம், களநிலவரம் என்றெல்லாம் கம்புசுற்றுயதைப் பார்க்கும்போது வேடிக்கையாகவும், ஜாலியாகவும் இருந்தது.
எது எப்படியோ.. செழியன் சாரின் "அன்பை" பற்றி பலர் பலவாறு சொல்லியும் நான் நம்பவில்லை. ஆனால் எப்போதும் கற்பனை வானில் சிறகடித்துப் பறந்துவந்த சீமானின் றெக்கைகளைப் பீய்த்து எறிந்துவிட்டு, இப்படி ஒரே நாளில் அவரை யதார்த்தமயமாக்கிய அன்பு சாரின் "செழிப்பை" நினைத்தால் புல்லரிக்கிறது.

-Ganesh Babu :
"நான் இதுவரை சீமான் அண்ணனை இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளரா பார்த்தேன். 'கந்துவட்டி' அன்புசெழியனை ஏன் இப்படி வலிந்துப்போய் ஆதரிக்கிறார்னு தெரியலை"
-இயக்குனர் அமீர்
அடப்பாவிகளா! புலம் பெயர்ந்த தமிழர்களோ, அன்புசெழியனோ.. காசுக்காக எதையாவது பேசி ஊரை ஏமாற்றிப் பிழைக்கும் 'இசூசு கார் ஓனர்' சீமானை விட, சீமான் போன்ற வசூல் மன்னர்களை எல்லாம் 'இந்த நூற்றாண்டின் சிந்தனையாளர்' என்று நம்பி பில்டப் செய்து தானும் ஏமாந்து, பிறரையும் ஏமாறவைக்கும் அமீர் போன்ற எமோஷனல் ஏகாம்பரங்கள் ஆபத்தானவர்கள்.

கருத்துகள் இல்லை: