சனி, 8 ஜூலை, 2017

சீன Vs இந்தியா .... இனி இஸ்ரேல் ஆயுதம் வாங்கி சமாளிக்க போறாய்ங்க ... இராஜதந்திரமாம் விகடன் நம்பிக்கை

மீண்டும் இந்தியா-சீனா யுத்தம் வருமா என்ற கேள்வியைக் கிளறியுள்ளது பூடான்-சீன எல்லையில் டோக்லாம் பீடபூமி பகுதியில் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேலாக நிலவும் பதற்றம். பூடானிலிருந்து இந்தியா படைகளைத் திரும்பப் பெறவேண்டும் அல்லது போருக்கு ஆயத்தமாக இருக்கவேண்டும் என வெளிப்படையாகவே எச்சரித்திருக்கிறது சீனா....
;பூடான் எல்லையில் சீனா அமைக்கும் சாலையால் இந்தியா பதறுகிறது.பூடானின் நான்கு திசைகளிலான எல்லையில்தான் இந்தியாவின் அருணாசலப் பிரதேசம், சிக்கிம், மேற்குவங்கம் போன்றவை வருகின்றன. அதன் வடஎல்லையில் சீனா இருக்கிறது. சீனாவுக்கும் பூடானுக்கும் நல்லுறவு இல்லாத நிலையில்... பூடானின் பாதுகாப்பை பல்லாண்டுகளாக இந்தியாதான் பூர்த்திசெய்துவருகிறது.

1961 வரை பூடானுக்கு அதிகாரப்பூர்வ மேப்பே கிடையாது. இந்திய உதவியுடன் பூடானின் மேப் 1971-ல் தான் உருவாக்கப்பட்டது. இந்தியா, பூடானுக்கான எல்லையே 2006-ல்தான் இறுதி செய்யப்பட்டது. அதேபோல சீனாவுக்கும் பூடானுக்கிடையிலான 470 கிலோமீட்டர் எல்லைப் பிரச்சனை இதுவரை இருநாடுகளாலும் இறுதிசெய்யப்படவேயில்லை.<>இன்றுவரை சீனாவுடன் பூடான் தூதரக உறவுகளைப் பேணவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தன் வட எல்லையில் ஆறு சாலைகளை சீனா அமைத்துவருவதாக பூடான், 2004-ல் பதற ஆரம்பித்தது. பூடானின் எதிர்ப்பையடுத்து இதில் நான்கு சாலைகளின் பணிகள் நிறுத்தப்பட்டன. எனினும், கடந்த இருபது நாட்களுக்கு முன்பு சிக்கிம், பூடான், சீனா மூன்றுக்கும் பொதுவான எல்லைப் பகுதியில் தொடர்ந்துவரும் சாலைப் பணி தொடர்பாக பிரச்சினை வெடித்தது.

பூடானுக்கு ஆதரவாக இந்தியா தன் படைகளை அனுப்ப, இருதரப்புக்கும் முட்டல் ஏற்பட்டு, தற்காலிகமாக சாலைப் பணி நிறுத்தப்பட்டுள்ளது.<>இந்தியாவை, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுடன் இணைப்பதற்கான முக்கிய பகுதி இந்த டோக்லாம் பீடபூமி. இந்தப் பகுதியில் மட்டும் சீனா தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்திவிட்டால், இந்தியா தனது வடகிழக்குப் பகுதி மாநிலங்களுக்கான விநியோகத்தை இப்போதுள்ளதுபோல் எளிமையாகச் செய்யமுடியாது. வடகிழக்குப் பகுதியில் சீனா ஆக்கிரமிப்புச் செய்யுமெனில், இந்தியாவால் அப்பகுதிக்கு ராணுவத்தை அனுப்புவதோ, வடகிழக்குப் பகுதியிலுள்ள ராணுவத்தைத் திரும்பப்பெறுவதோ எளிதாக இருக்காது.


பிரிட்டிஷாருடன் 1890-ல் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, சாலை அமைத்துவரும் இடம் தங்களுக்குரியது என்று சொல்லும் சீனா, ""இந்தியா முதலில் படைகளை வாபஸ் பெறவேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தைக்கே வரமுடியும். இல்லையெனில் 1962 போரில் நடந்ததைவிட மோசமான விளைவுகளை இந்தியா சந்திக்கவேண்டியிருக்கும்'' என்கிறார் இந்தியாவுக்கான சீனத் தூதர் லூ சாவ்ஹீ.<">இந்தியத் தரப்பிலோ, 1962-ல் இருந்த நிலை இன்று இல்லை. சீனாவின் சவாலை எதிர்கொள்ளும் பலத்துடன் இந்தியா இருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் அருண்ஜெட்லியிடமிருந்து தன்னம்பிக்கையுடன் பதில் வருகிறது.

இப்படிப்பட்ட பதிலை இந்தியா வெளிப்படுத்தும் நிலையில்தான்... பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தை ராஜதந்திர நடவடிக்கையாக கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். இஸ்ரேலுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடியாவார். நேரு காலத்திலிருந்து இந்தியா, அணிசேரா நாடுகள் அமைப்பை நடத்திவந்ததால் அமெரிக்கா-ரஷ்யா எந்த அணியிலும் இல்லாமல் தனக்கென ஒரு தனித்துவத்தைப் பேணிவந்தது.<>நாளடைவில், அணிசேரா அமைப்பு மறைந்து அமெரிக்காவுடனான நெருக்கத்தை இந்தியா வெளிப்படுத்தியபோதும் எந்த இந்தியப் பிரதமரும் இஸ்ரேலுக்குச் சென்றதில்லை. மோடியின் இந்த விசிட், ஆயுத ரீதியான சாதகத்தை மட்டுமல்ல -வேறுவகையிலான லாபத்தையும் அளிக்குமென யூகம் செய்கின்றனர்.

;ஏற்கெனவே அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இஸ்ரேல்தான் இந்தியாவுக்கு அதிக ஆயுதங்களை வழங்கிவந்துள்ளது. பாகிஸ்தான், சீன எல்லைகளில் பாதுகாப்பை உறுதிசெய்ய 8000 ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தமே மோடியின் இஸ்ரேல் பயணத்தின் முக்கியத்துவம். இதுவரை இந்தியப் பிரதமர்கள் எவரும் காட்டாத நெருக்கத்தை மோடி காட்டியுள்ளதால், இஸ்ரேலும் தன் பங்குக்கு போப் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கு தரும் மரியாதையை இந்திய பிரதமருக்கு தந்துள்ளது.<">தவிரவும், ஏற்கெனவே சீன வெறுப்பிலிருக்கும் அமெரிக்காவுடன், இந்தியா நெருக்கத்திலிருப்பதால்...  போர் ஏற்பட்டால், அமெரிக்கா நேரடி ஆதரவு தராவிட்டாலும் மறைமுக ஆதரவு தரலாம். இந்திய-இஸ்ரேல்-அமெரிக்க கூட்டணியின் ஆயுத பலம், சீனாவை யோசிக்க வைக்கும் என்கிறார்கள் சர்வதேச அரசியல் நிலவரமறிந்தவர்கள்.<>-க.சுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை: