வியாழன், 20 அக்டோபர், 2016

ஜனகன’விற்கு எழுந்து நிற்காத மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்: முடமானவன் பேட்ஜ் அணிய வேண்டுமா?;

insideimage_1476873800.jpgthetimestamil.com : எழுத்தாளர். மாற்றுத்திறனாளிகளுக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர். குழந்தைகளின் மிக விருப்பமான ‘Galli Galli Sim Sim’ நிகழ்ச்சியின் அடிப்படையானவர். பார்வையற்றவர்களுக்காக கொங்கனி மொழியில் முதல் ஆடியோ புத்தகம் கொண்டு வந்தவர். அது மட்டுமல்லாமல், பார்வையற்ற குழந்தைகளை, பறவைகளை பார்க்க அழைத்து செல்லும் ஆர்வமுடையவர்.
84-ம் வருடம் முதல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் வலம் வரும் கோவாவை சேர்ந்த சலீல் சதுர்வேதியை பற்றிதான், மேலே குறிப்பிட்டிருக்கிறோம்.
தேசப்பற்றாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் சலீல் சதுர்வேதி, பழகுவதற்கு மென்மையானவர். மரியாதைக்குரியவர் என்கிறார்கள் ஊடகவியலாளர்கள்.  தேசப்பற்று இல்லாத நாடுகளில்தான் இந்த மாதிரி கண்டமேனிக்கு தேசியகீதம்  போன்ற தமாசுகள் இடம்பெறுகிறது. போலி  தேசியவாதிகள் இன்னொரு முகமூடிதான் இது
இதை பற்றி அவர், ஆங்கில தொலைகாட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியை கீழே அளித்திருக்கிறோம்.
தேசப்பற்றாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் சலீல் சதுர்வேதி, பழகுவதற்கு மென்மையானவர். மரியாதைக்குரியவர் என்கிறார்கள் ஊடகவியலாளர்கள். இந்த தாக்குதல் பற்றி அவர், ஆங்கில தொலைகாட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியை கீழே அளித்திருக்கிறோம்.கோவாபனாஜியில் உள்ள ஐனாக்ஸ் தியேட்டரில் ரஜினியின்
கபாலிபார்க்க போனேன். ரஜினியை இதுவரை பார்த்ததில்லை. அவரை பற்றிய நகைச்சுவை துணுக்குகளை படித்திருகிறேன். அவரை பார்ப்பதற்காகவே தியேட்டர் சென்றேன்.
அந்த தியேட்டரில்சக்கர நாற்காலிகளில் செல்பவர்களுகான வசதிகள் இல்லாததால், என்னுடைய நண்பர்கள், என்னை தூக்கி சென்று, அங்கிருந்த நல்லதொரு இருக்கையில் அமர வைத்தார்கள்.
படம் தொடங்குவதற்கு முன்பாக, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று உணர்ச்சிகரமாக பாடத் தொடங்கினார்கள். நான் மாற்றுத்திறனாளி என்பதால், என்னால் எழுந்து நிற்க முடியவில்லை.
அப்போதுதான், என் பின்னால் நின்றிருந்த ஜோடி ஒன்று, எதிர்பாராவிதமாக என் தலையில் ஓங்கி அடித்தார்கள். நான் ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டேன்.
நான் அவர்களை திரும்பி பார்த்தபோது, “தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்குமாறுகூறினார்கள். நான் தேசிய கீதம் முடியும் வரை காத்திருந்து பின்னர் அவர்களிடம் நீங்கள் பாடிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், என்னுடைய கதை என்னவென்று அறியாமல் எதற்காக என்னை அடித்தீர்கள்என்று கேட்டேன்.
கோவா-வாக இருந்ததால் மட்டுமே என்னால், அந்த கேள்வியை கேட்க முடிந்தது என்று நினைக்கிறேன். பின், அவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டு தியேட்டரை விட்டு வெளியேறினார்கள். என்றாலும், நம்முடைய சமூகம் மிக குறுகிய மனப்பான்மையுடன் மாறி கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.
இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட ஒரு கருத்து. ஒரு எண்ணம். அதை, தட்டையாக்க முயலுவது, ஏற்றுகொள்ள முடியாதது.
என்னை அடித்தவர்களுக்கு  நான் மாற்றுத்திறனாளி என்பது தெரியாதுதான். ஆனால், மாற்றுத் திறனாளியாக இல்லாதவர்கள், தேசிய கீதத்திற்காக எழுந்து நிற்கவில்லை என்றால், அவர்களை அடிப்பதை நியாயம் என்று ஒத்துக் கொள்ள முடியுமா ?
இந்த சம்பவத்திற்கு பின் தியேட்டர் செல்ல அச்சமுருவதாக சலீல் தெரிவிக்கிறார்.
யாராவது மிக பலமாக என்னை அடித்துவிட்டால், எனக்கிருக்கும் முதுகெலும்பு பிரச்சனை அதிகமாகிவிட்டால் என்ன செய்வது என்று பயமாக இருக்கிறது.
ஒருவேளை, எனக்கு எழுந்து நிற்க முடிந்தால் கூடதேசிய கீதத்திற்காக இப்போது நான் எழுந்து நிற்க மாட்டேன் என்று தோன்றுகிறது.
விமானப்படை வீரரின் மகனான நான் , என் மீது கட்டாயப்படுத்தப்படும், திணிக்கப்படும் எதையும்  செய்ய மாட்டேன். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்பில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கை இப்படிதான் இருக்கிறது.

நீங்கள் யார் இந்தியா மீதான என்னுடைய அன்பை சோதித்து பார்ப்பதற்கு ?
இதற்காகத்தான் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்டோமா ?
மிகக் கொடூரமான, சூழ்ச்சி மிகுந்த மிருகத்தனமானவர்களின் தலைமையின் கீழ் ஒன்று சேரும் ஆடுகளை போல இருப்பதற்காகவா, நாம்  சுதந்திரத்தை போராடி பெற்றோம் ?
அப்படிதான் என்றால், இந்த வெட்ககேட்டில், நான் பங்கெடுக்க மாட்டேன்.

கருத்துகள் இல்லை: