திங்கள், 17 அக்டோபர், 2016

ராஜாத்தி அம்மாளின் கோரிக்கையை சசிகலா புஷ்பா ஏற்க மறுப்பு! விட்டுகொடுக்க முடியாதாம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது இந்த நிலமைக்கு சசிகலா தான் காரணம் என தொடர்ந்து பேட்டியளித்து வருகிறார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா.சசிகலா கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற பார்கிறார். முதல்வர் ஜெயலலிதா உடல் நலமில்லாமல் போக காரணம் சசிகலா தான். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். சசிகலாவை உடனடியாக அப்பல்லோவில் இருந்து வெளியெற்ற வேண்டும் என சசிகலா புஷ்பா பேட்டியளித்தார்.>சசிகலா புஷ்பாவால் சசிகலா தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க சென்ற திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் சசிகலா உடன் 45 நிமிடம் பேசினார்.இந்த சந்திப்பின் போது சசிகலா புஷ்பாவை அமைதியாக இருக்குமாறும், முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது தன்னை பற்றி இப்படி பேசுவதை நிறுத்துமாறும் பேசுமாறு சசிகலா ராஜாத்தி அம்மாளிடம் கூறியதாக கூறப்பட்டது."அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ராஜாத்தி அம்மாள் டெல்லியில் உள்ள சசிகலா புஷ்பாவிடம் தன்னுடைய உதவியாளர் மூலம் பேசியுள்ளார்.
ஆனால் சசிகலா புஷ்பா விட்டுக்கொடுக்கும் முடிவில் இல்லை என பதில் அனுப்பி உள்ளதாக செய்திகள் வருகின்றன.>நான் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருந்தபோது, எனக்கு ஆதரவாக நீங்கள் இருந்ததற்கு என்னுடைய நன்றி. நீங்கள் செய்த உதவிகளை மறக்க முடியாது. ஆனால் உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறேன்."இப்போதுள்ள சூழலில், கட்சி சீனியர்கள் என்னிடம் வேறு மாதிரி சொல்கின்றனர். நாளை அம்மா குணமாகி வந்தால், என்னுடைய செயலை பாராட்டுவார் என்கின்றனர். நான் இவ்வாறு செயல்படுவதையே கட்சித் தொண்டர்களும் விரும்புகின்றனர் என ராஜாத்தி அம்மாளின் உதவியாளரிடம் சசிகலா புஷ்பா சொல்லி அனுப்பியதாக கூறப்படுகிறது.  வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை: