வியாழன், 16 ஜூன், 2016

குஜராத் சமுக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டின் என் ஜி யோவின் உரிமம் ரத்து..


டெல்லி: குஜராத் சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டின் சப்ராங் டிரஸ்ட் என்ற என்.ஜி.ஓவின் லைசென்ஸை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதன் மூலம் சப்ராங் டிரஸ்ட் வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெற முடியாது.
குஜராத்தில் 2002-ம் ஆண்டு மத கலவரம் தொடர்பான ஏராளமான உண்மைகளை அம்பலப்படுத்தியவர் டீஸ்டா செதல்வாட். மத்தியில் பாஜக அரசு அமைந்தது முதல் டீஸ்டா செதல்வாட் மற்ரும் அவரது கணவர் ஜாவேத் ஆனந்த் மீது நடவடிக்கைகள் பாயத் தொடங்கின.< டீஸ்டா செதல்வாட் நடத்தி வந்த சப்ராங் டிரஸ்ட், சப்ராங் கம்யூனிகேசன்ஸ் அண்ட் பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த நிதி குறித்த விவரங்களை கையிலெடுத்தது.

2010-11; 2011-12-ம் ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து கிடைத்த நிதியில் 55% மற்றும் 65% அளவுக்கு நிர்வாக ரீதியாக செலவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் என்.ஜி.ஓ.க்களுக்கான விதிகளின்படி வெளிநாட்டு நிதியில் இருந்து 50%க்கு மேல் செலவு செய்வதற்கு உள்துறை அமைச்சக அனுமதி தேவை. ஆனால் அப்படி அனுமதி பெறவில்லை டீஸ்டா செதல்வாட்டின் நிறுவனங்கள். அத்துடன் டீஸ்டா செதல்வாட்டின் என்.ஜி.ஓ.க்கள் வெளிநாட்டு நிதி உதவியுடன் அரசுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் இந்த என்.ஜி.ஓக்களின் லைசென்ஸ் சஸ்பென் செய்யப்பட்டது. தற்போது லைசென்ஸ் முற்றாக ரத்து செய்துள்ளது உள்துறை அமைச்சகம்.
இதனால் வெளிநாட்டு நிதியை டீஸ்டாவின் சப்ராங் டிரஸ்ட், சப்ராங் கம்யூனிகேசன்ஸ் அண்ட் பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட் ஆகியவை பெற முடியாத நிலை உருவாகி யுள்ளது. tamil.onenidia.com

கருத்துகள் இல்லை: