;ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை குப்புசாமி, மைலம்மாள் தம்பதியினரின் மகன் சசிகுமார் . விவசாய குடும்பத்தில் பிறந்த சசிக்குமார் 2012 ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்தெடுக்கப்பட்டார். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆலகட்டா ஏ.எஸ்.பி. யாக 2014 ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார்.
அங்கு செம்மரக்கடத்தல் வழக்கில் முழு பங்களிப்புடன் பல முக்கிய குற்றவாளிகளை கைது செய்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விசாகப்பட்டினம் மாவட்டம் பாடேரூ ஏ.எஸ்.பியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட பிறகு அந்த பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்டு வந்த பலரை கைது செய்து தனது பணியில் நேர்மையான அதிகாரியாக காவல் துறையில் பெயர் பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை தனது அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. துப்பாக்கி சத்தம் கேட்டு வெளியே இருந்த மற்ற காவலர்கள் ஓடிவந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த ஏ.எஸ்.பி. சசிகுமாரை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பாடேரூ அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் மருத்துவ மனைக்கு வரும் வழியிலேயே அவர் உயிர் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஏ.எஸ்.பி. சசிகுமார் உடல் விசாகப்பட்டினம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த ஏ.எஸ்.பி. சசிகுமார் உறவினர்கள் விசாகப்பட்டினத்திற்கு விரைந்துள்ளனர்.
;நேர்மையான அதிகாரிகள் என்ற பெயர் பெற்ற சசிகுமார் அவரது துப்பாக்கி தவறுதலான நிலைக்கு சென்று தலையில் சுட்டு இறந்தாரா அல்லது மேல் அதிகாரிகளின் டார்ச்சரா அல்லது குடும்ப பிரச்சனையா என்பது மர்மமாக உள்ளது. விவசாய குடும்பத்தில் பிறந்த சசிகுமார் அவரது குடும்பத்திலேயே முதல் முறையாக அரசு பணியில் சேர்ந்துள்ளார். திருமணம் ஆகாததால் தனியாக இருந்து வந்த நிலையில் அவர் இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. nakkeeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக