வெள்ளி, 17 ஜூன், 2016

ஜிஷா மீது 27 கத்திக்குத்துக்கள் ... திட்டமிட்ட பாலியல் வன்முறை, கொலை..

அஸ்ஸாம் முஸ்லிம் வாலிபரால் கற்பழித்து கொல்லப்பட்ட கேரள மாணவியின் உடலில் 27 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. தண்ணீர் கேட்டு கதறிய மாணவியின் வாயில் மதுவை ஊற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பெரும்பாவூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா (வயது 31) கடந்த ஏப்ரல் மாதம் 28–ந்தேதி தனது வீட்டில் தனியாக இருந்தபோது கொடூரமான முறையில் கற்பழித்து படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலில் மர்ம உறுப்பு உள்பட 27 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது. தலித் மாணவியான ஷிஜா கொலை கேரள மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கடந்த கேரள சட்டசபை தேர்தலிலும் முக்கிய பிரச்சினையாக எதிரொலித்தது.
மாணவி ஷிஜா கொலை தொடர்பாக ஏ.டி.ஜி.பி. சந்தியா நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கு சூடுபிடித்தது. அவரது தலைமையிலான அதிகாரிகள் குழு தீவிர விசாரணை நடத்தி இந்த கொடூர கொலையில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீருல் இஸ்லாம் (வயது 23) என்ற கட்டிட தொழிலாளியை காஞ்சீபுரத்தில் வைத்து நேற்று கைது செய்தனர். மாணவி ஷிஜா கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளி சிக்கியது எப்படி? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

மாணவி ஷிஜா துணிச்சல் மிக்கவர். அந்த பகுதியில் யாராவது தகராறில் ஈடுபட்டாலோ அல்லது தன்னிடம் வம்பு செய்தாலோ அதை தட்டிக்கேட்பார். அவர்களை ஒரு கை பார்க்காமல் அவர் விடமாட்டார். அவரது இந்த துணிச்சலே அவருக்கு பலரது விரோதத்தை ஏற்படுத்தியது.

ஷிஜாவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் அமீருல் இஸ்லாம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஷிஜாவின் வீட்டில் நடந்த கட்டுமான பணியின்போது முதல் முறையாக ஷிஜாவை பார்த்துள்ளார். அப்போதே அவரை அடைய வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஷிஜாவிடம் ஆபாசமாக பேசி வாங்கிக் கட்டி கொண்டுள்ளார். மேலும் ஷிஜா அந்த பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றபோது அவரிடம் சில்மிஷம் செய்ய முயன்றதால் அவரை ஷிஜா செருப்பால் அடித்துள்ளார். இதனால் ஏற்பட்ட அவமானத்திற்கு பிறகு அமீருல் இஸ்லாம் அந்த பகுதியில் தலைகாட்டவில்லை.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மாணவி ஷிஜா வசித்த வீடு அருகே நடந்த கட்டிட பணிக்காக மீண்டும் அமீருல் இஸ்லாம் அங்கு வந்துள்ளார். அப்போது ஷிஜாவை பார்த்ததும், மீண்டும் அவரிடம் தனது வேலையை காட்டி உள்ளார். உடனே ஷிஜா தனது செருப்பை கழற்றி காட்டி அவரை எச்சரித்துவிட்டு சென்றுவிட்டார்.

இதனால் ஆத்திரத்தின் எல்லைக்கு சென்ற அமீருல் இஸ்லாம் மது கடைக்கு சென்று மது அருந்திவிட்டு ஷிஜாவின் வீட்டு அருகே சென்று நோட்டமிட்டுள்ளார். அப்போது வீட்டில் ஷிஜா மட்டும் தனியாக இருந்துள்ளார். உடனே வீட்டுக்குள் புகுந்த அவர், ஷிஜாவை கற்பழிக்க முயற்சி செய்துள்ளார்.

ஆனால் ஷிஜா அவரை எதிர்த்து போராடி உள்ளார். பெண் புலி போல் ஆவேசமாக ஷிஜா அவரை எதிர்த்ததால் தன்னிடமிருந்த கத்தியால் அமீருல் இஸ்லாம் ஷிஜாவை சரமாரியாக குத்தினார். அவரது மர்ம உறுப்பு உள்பட 27 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஷிஜா தண்ணீர் கேட்டு கதறி உள்ளார். ஆனால் அப்போதும் மனம் இரங்காத அமீருல் இஸ்லாம் தன்னிடம் இருந்த மது பாட்டிலை திறந்து மதுவை ஷிஜா வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றி உள்ளார்.

இதனால் மயங்கிய ஷிஜாவை அவர் கொடூரமாக கற்பழித்துள்ளார். மேலும் ஷிஜா இறந்து விட்டதை உறுதி செய்து கொண்ட பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

கொலையாளி அமீருல் இஸ்லாம் இந்த கொடூர செயலை செய்த பிறகு ஷிஜா வீட்டில் இருந்து வெளியேறிய போது மழை காரணமாக அந்த பகுதியில் ஏற்பட்ட சேற்றில் அவரது செருப்புகள் சிக்கிக் கொண்டது. அந்த செருப்புகளை மீட்க முடியாததால் அவர் அதை விட்டு விட்டு சென்றுவிட்டார்.

இந்த கொலை பற்றி துப்பு துலக்கிய ஏ.டி.ஜி.பி. சந்தியா, தலைமையிலான போலீசாருக்கு இந்த செருப்புதான் முக்கிய துப்பாக உதவியது. அந்த செருப்பில் ரத்தக்கறை இருந்ததாலும் சிமெண்ட் கலவை படித்திருந்ததாலும் அதன் மூலம் விசாரணையை துரிதப்படுத்தினார்கள்.

அந்த செருப்பை வாங்கியது யார்? என்று அந்த பகுதியில் உள்ள கடைகளில் விசாரித்தபோது, அமீருல் இஸ்லாம் பற்றி தெரிய வந்தது. செருப்பில் இருந்த ரத்தக்கறை மாணவி ஷிஜாவின் ரத்தம் என்பதும் உறுதி செய்யப்பட்டது. அக்கம் பக்கத்தினர் கூறிய அடையாளங்கள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான உருவம் மூலம் கொலையாளியை கம்ப்யூட்டர் படம் வரைந்து அடையாளம் கண்டனர். இதை தொடர்ந்து கொலையாளியை போலீசார் கைது செய்துவிட்டனர்.

தற்போது அமீருல் இஸ்லாமிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் கொலை நடந்த ஷிஜா வீட்டிற்கு அவரை அழைத்து சென்றும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்

கருத்துகள் இல்லை: