மதுரை SMP காலனியை சேர்ந்த லக்ஷமணன் என்னும் பதினைந்து வயது மாணவன்,
12.06.16 அன்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்புகையில் கொடூரமாக
அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறான்.
மாணவனது உடலை வாங்க மறுத்து, விடுதலை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கொலையாளிகளை “எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மீது வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கும் சட்டத்தின்” கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து, கொலை தொடர்பாக ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கொலை எதற்காக என்பது குறித்து, மதுரையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம் பேசி, காரணத்தை தெரிந்து கொள்ள முயற்ச்சித்து கொண்டிருக்கிறேன். காரணம் என்னவாக வேண்டுமானால் இருக்கட்டும். ஆனால் ஒரு பள்ளி சிறுவனின் படுகொலைக்கு வேறு எந்த அரசியல் கட்சிகளும் இதுவரை குரல் கொடுக்காதது ஏன் ? எதற்காக விடுதலை சிறுத்தைகள் மட்டும் போராட்டம் செய்து கொண்டிருக்கிறது ?
இந்த கொலை பற்றி யாராவது பேசுவார்கள் என்று இரண்டு நாட்களாக நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்கள் மட்டுமே இதைப் பற்றி பேசி கொண்டிருக்கிறார்கள்.
மற்றவர்கள், கபாலி பற்றிய தலித்துகளின் பதிவை கிண்டலடிப்பதிலும், ஏழு தமிழர் விடுதலை கோரிய பேரணியில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டதைப் பற்றிய பெருமைகளிலும், சமஸ்கிருத மொழியை எதிர்த்து கருணாநிதி பேசுவது குறித்து மட்டுமே எழுதி கொண்டிருக்கிறார்கள்.ஒரு வேளை, சிறுவனின் படுகொலை பற்றிய சிசி டிவி காட்சிகளுக்காகக் காத்து கொண்டிருக்கிறார்களோ என்னவோ ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக