ஞாயிறு, 12 ஜூன், 2016

அமெரிக்க இரவு விடுதியில் துப்பாக்கி சூடு 20 பேர் மரணம் 42 பேர் காயம்


Authorities in Florida said at a news conference Sunday morning that “as many as 20 people died” in a shooting at an Orlando nightclub. ... Orlando Police Chief John Mina said at least 42 people have been transported to area hospitals. .
நியூயார்க், புளோரிடாவில் இரவு விடுதியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 20 பேர் கொல்லப்பட்டனர். 42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் ஓர்லிண்டோ நகரில் பல்ஸ் என்ற இரவு விடுதி உள்ளது. இந்த விடுதியில் அதிகாலை நேரத்தில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் கூட்டத்தை பார்த்து சரமாறியாக சுட்டார். இதனால் இரவு நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு ஓட துவங்கினர். தகவல் அறிந்து வந்த போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சுமார் காலை 7 மணி வரை நீடித்தது.
இறுதியில் மர்ம நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலியானார்கள். 42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு நடத்த 2-வது துப்பாக்கி சூடு இது என்பது குறிப்பிடத்தக்கது. பாடகி கிறிஸ்டினா கிரிம்மி சுட்டு கொல்லப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாலைமலர்.காம்

கருத்துகள் இல்லை: