விழுப்புரம்
மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே முன்சக்கரம் கழன்டு ஓடியதால் கனரக வேன்
கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட 6 பந்தய
குதிரைகள் பரிதாபமாகஉளுந்தூர்பேட்டை அருகே உயிரிழந்தன.கொடைக்காணலில்
அண்மையில் நடந்த மலர்க்கண்காட்சியையொட்டி அங்கு குதிரைப் பந்தயமும்
நடைபெற்றது. பார்வையாளர்களை கவர நடத்தப்பட்ட இந்த பந்திய போட்டிக்கு சென்னை
கிண்டியில் இருந்து பந்தய குதிரைகள் கனரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டன.
நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் நேற்று மாலை கனரக வாகனம் மூலம் 6 குதிரைகளை
ஏற்றிக்கொண்டு சென்னை கிண்டியை நோக்கி செல்லப்பட்டது.
இன்று காலை விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் என்ற இடத்தில் வரும்போது, என்ஜின் கோளாறு காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தின் முன் பக்க டயர்கள் கழண்டு ஓடின.&;"
;இதனால் வேன் விபத்துக்குள்ளாகி, ஓட்டுநர் ஆறுமுகம், பந்தய குதிரையின் பயிற்சியாளர்கள் 5 பேர் உளிட்டவர்கள் காயமடைந்தனர். வேனில் கொண்டு வரப்பட்ட ரூபாய் ஒரு கோடியே 50 லட்சம் மதிப்பலான 6 பந்தய குதிரைகள் ஒன்றன் மீது ஒன்று விழுந்து உயிரிழந்தன. படுகாயம் அடைந்த 5 பேரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நக்கீரன்.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக