Sugumaran Govindarasu:
தமிழகக் காவல்துறை போட்ட பொய் வழக்கில் புதுக்கோட்டை கிளைச் சிறையில்
அடைக்கப்பட்ட துரை குணா சற்று முன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர் பொ.இரத்தனம் சிறை வாயிலில் இருந்து இந்தத் தகவலைக் கூறினார்.
துரை குணா கத்தியால் குத்தியதாக புகார் அளித்தவர் நீதிமன்றத்தில் ஆஜராகி,
என்னை அவர் கத்தியால் குத்தவில்லை, எனக்கு எந்தக் காயமும் இல்லை, என்னிடம்
வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கிப் போலீசார்
புகார் எழுதிக் கொண்டனர் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பிணை
வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பிணைப் பெற்ற பின்னர், 2015ல் துரை குணா
மீது பொய்யாகப் போடப்பட்ட கொலை முயற்சி வழக்கிலும் வாரண்ட் பெற்றுள்ளனர்
காவல்துறையினர். உடனே வழக்கறிஞர் இரத்தினம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள்
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்குத் தொடர்ந்து (Lunch Motion)
வாதிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி சசிதரன் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கறிஞர் இரத்தினம் உள்ளிட்டோர் புதுக்கோட்டை கிளைச் சிறையில் கொண்டு சென்று பிணை ஆணையைக் கொடுத்ததில், சிறை நிர்வாகத்தினரும் பல்வேறு பிரச்சனைகளைக் கிளப்பியுள்ளனர். பிணை ஆணையை அஞ்சலில் அனுப்ப வேண்டும், மாலை 5 மணிக்குள் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். வழக்கறிஞர் இரத்தினம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்வோம் எனக் கூறியதால் வேறு வழியில்லாமல் சிறை நிர்வாகத்தினர் விடுதலை செய்துள்ளனர். /thetimestamil.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக