வியாழன், 24 டிசம்பர், 2015

பாஜக எம்பி கீர்த்தி ஆசாத் மோடி மீது கடும் குற்றச்சாட்டு: கிரிக்கெட் சங்க ஊழல் சிபிஐ ஏன் சோதனை நடத்தவில்லை?

நான் செய்த தவறு என்ன என்பதை பாஜகவும், மோடியும் விளக்க வேண்டும்:
கீர்த்தி ஆசாத் எந்த காரணமும் தெரிவிக்காமல் தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக பாஜக எம்பி கீர்த்தி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நடந்ததாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மீது
குற்றச்சாட்டு கூறிய பாஜக எம்பி கீர்த்தி ஆசாத் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தி ஆசாத்,
ஊழலுக்கு எதிராக பேசியதால்தான் சஸ்பெண்ட் நடவடிக்கையா. நான் செய்த தவறு என்ன என்பதை பாஜக தலைமையும், பிரதமர் மோடியும் விளக்க வேண்டும். டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு புகாரை எழுப்புவது கட்சிக்கு எதிரான நடவடிக்கை இல்லை. நான் யாருடைய முதுகிலும் குத்த விரும்பவில்லை. டெல்லி முதல் அமைச்சர் அலுவலத்தில் அதிரடி சோதனை நடத்திய சிபிஐ, டெல்லி கிரிக்கெட் சங்க அலுவலத்தில் ஏன் அத்தகைய சோதனையை நடத்தவில்லை.
டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் முக்கிய ஆவணங்கள் மாயமாகி வருகின்றன. நேற்று முன்தினம் இரண்டு பெட்டிகள் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டது என்றார். nakkheeran,in

கருத்துகள் இல்லை: