சனி, 26 டிசம்பர், 2015

யமுனா விரைவு சாலை விற்பனை: 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனால் ஜே.பி., குழுமம்.....நொய்டா - ஆக்ராவை இணைக்கும்

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலத்தில், கிரேட்டர் நொய்டாவையும், உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ், 2012 ஆக., 9ல், யமுனா விரைவு நெடுஞ்சாலையை, வாகனப் போக்குவரத்திற்கு திறந்து வைத்தார்.
ஆக்ராவையும் இணைக்கும், 165 கி.மீ., நீளமுள்ள, 'யமுனா விரைவு நெடுஞ்சாலை'யை, விற்பனை செய்யப் போவதாக, அதை அமைத்த ஜே.பி., குழுமம் அறிவித்துள்ளது.டில்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டாவையும், ஆக்ராவையும் இணைக்கும், அதிவிரைவு நெடுஞ்சாலை திட்டத்தை, 2003ல், உ.பி.,யின் அப்போதைய முதல்வராக இருந்த மாயாவதி அறிவித்தார். பின், ஆட்சி மாற்றம் காரணமாக, இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2007ல், மாயாவதி மீண்டும் உ.பி., முதல்வரானதும், 'யமுனா விரைவு நெடுஞ்சாலை' என்ற பெயரில், இத்திட்டம் உயிர் பெற்றது.
ஜே.பி., குழுமம் என்ற நிறுவனம், 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 165 கி.மீ., நீளமுள்ள, இந்த ஆறு வழி விரைவு நெடுஞ்சாலையை, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே அமைத்து முடித்தது.

இந்த அதிவிரைவு நெடுஞ்சாலையில், தினமும், ஒரு லட்சம் வாகனங்கள் செல்லும் என, எதிர்பார்க்கப்பட்டது. இதன்மூலம், சுங்கச்சாவடி கட்டணமாக, ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, ஜே.பி., குழுமம் மதிப்பிட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு, வாகனப் போக்குவரத்து இல்லாததால், ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் அளவுக்கே வருவாய் கிடைத்தது. இதற்கிடையே, யமுனா விரைவு நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ், ஐந்து இடங்களை, ஜே.பி., குழுமத்தின் ஒரு அங்கமான, ஜே.பி., இன்பிராடெக் நிறுவனம் மடக்கிப் போட்டு, அங்கு ஐந்து நகரியங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. யமுனா விரைவு நெடுஞ்சாலை மூலம், போதிய வருவாய் இல்லாததால், நகரியங்களில் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளும் முடங்கின. அதேசமயம், ஜே.பி., குழுமத்தைச் சேர்ந்த, ஜெயப்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும், நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால், ஜே.பி., குழுமம், 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடனில் சிக்கி, தத்தளித்து வருகிறது. இந்த கடன் நெருக்கடி காரணமாக, யமுனா விரைவு நெடுஞ்சாலை திட்டத்தை விற்பனை செய்யப் போவதாக, ஜே.பி., குழுமம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: