வெள்ளி, 25 டிசம்பர், 2015

உணர்ச்சி வசப்பட்ட நடிகை ரோஜா தகாத வார்த்தைகளை ஏன் பேசினார்? சந்திரபாபுவின் கந்து வட்டி கொடுமைதான் காரணமாம் ...


நகரி,டிச.25 (டி.என்.எஸ்) முதல்வர் சந்திர பாபுநாயுடுவை தரக்குறைவாக பேசியதாக கூறி, நகரி தொகுதி எம்.எல்.ஏ-வான நடிகை ரோஜாவை சபாநாயகர் கோடல சிவபிரசாத் சட்டசபையில் இருந்து ஒரு ஆண்டுக்கு நீக்கம் செய்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி சட்டப்பேரவை செயலாளர் சத்திய நாராயணாவிடம் நோட்டீசு வழங்கினார்
.
இதற்கிடையே சட்டசபையில் ரோஜா பேசிய வீடியோவை அரசு கொறடாவும், அமைச்சருமான ஸ்ரீனிவாசலு நேற்று ஊடகங்களுக்கு வெளியிட்டார். சபாநாயகர் அனுமதியுடன் இந்த வீடியோ வெளியிடுவதாக அவர் கூறினார்.
ஆனால் அந்த வீடியோவில் ரோஜாவின் பேச்சு மட்டுமே இடம் பெற்று இருப்பதாகவும், ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசியது ‘எடிட்’ செய்யப்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ரோஜா பேசிய வீடியோ வெளியிட நான் அனுமதி கொடுக்கவில்லை. ரோஜா பேசிய வீடியோ காட்சிகள் அடங்கிய சி.டி.க்களை தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கட்சியினருக்கு அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வழங்கப்பட்டு உள்ளது.
ரோஜாவின் தண்டனையை குறைக்க வேண்டும் என்கிறார்கள். இது குறித்து விசாரணை நடத்த துணை சபாநாயகர் புத்த பிரசாத் தலைமையில் தெலுங்கு தேசம், பா.ஜனதா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்படும். அவர்கள் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து சட்டசபை உரிமை குழுவுக்கு அனுப்புவார்கள் அதன்பிறகு உரிமைக்குழு முடிவு செய்யும்.
ரோஜா சட்டசபையில் நடந்து கொண்ட முறையும், பேசிய முறையும் சரியல்ல. பலமுறை அவருக்கு எடுத்து கூறிய போதும் அதை அவர் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை. அதனால்தான் அவரை இடைநீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் அவர்கள் என் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து உள்ளனர். அதனை தர்மத்தின்படி எதிர்கொள்வேன். எனது 35 ஆண்டு கால அரசியல் அனுபவத்தில் இந்த கூட்டத்தொடரில் நடந்தது போன்ற சம்பவங்களை பார்த்ததில்லை.
இவ்வாறு சபாநாயகர் சிவபிரசாத் கூறினார்.

கருத்துகள் இல்லை: