டென்மார்க்கை ஆளும் மையவாத வலதுசாரிக் கட்சியான வென்ஸ்ட்ரே கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
அகதிகளுக்கு எதிராக டென்மார்க் அரசு கொண்டுவரும் கடுமையான விதிகளை எதிர்த்தே அவர் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் ஜென்ஸ் ரோத், டேனிஷ் சோஷியல் லிபரல் கட்சியில் இணையப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கை ஆளும் சிறுபான்மை அரசாங்கம் குடியேறிகள் தொடர்பான கடும்போக்கு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் மக்கள் கட்சியின் ஆதரவில் ஆட்சி செய்துவருகிறது.
இந்த பின்னணியில் சமீபத்தில் அகதிகள் தொடர்பான புதிய சட்டமசோதா ஒன்றை டென்மார்க் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்திருக்கிறது.
அதன்படி, அகதிகளின் உடைமைகளை தீவிரமாக பரிசோதனை செய்வதற்கு காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. bbc.தமிழ்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக