வியாழன், 24 டிசம்பர், 2015

நீங்களும் வாங்க...திமுகவுடன் சேர்ந்து கூட்டணி....விஜயகாந்த் வைகோ கோஷ்டிக்கு...அட்டுவைசு ..

சென்னை: தி.மு.கவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்போம் நீங்களும் வாருங்கள் என்று தம்மை சந்தித்த வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு ஆலோசனை கூறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளாராம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விஜயகாந்தை கடந்த வாரம் சந்தித்தனர். எப்படியும் விஜயகாந்த்தை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தக்க வைத்து கொள்ளலாம் என்பது அவர்களது கணக்கு. ஆனால் விஜயகாந்த் தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததால் பா.ஜ.க. தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் இன்னமும் நம்பிக்கையை சற்றும் விட்டுக் கொடுக்காமல் பா.ம.க, தே.மு.தி.க.வை எப்படியும் இழுத்துவிடுவோம் என்கிற அசாத்திய தைரியத்தில் இருக்கிறது பா.ஜ.க.

இதனைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகியோர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள், நாங்கள் உங்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கிறோம்...எங்கள் கூட்டணிக்கு வந்துவிடுங்கள் எனக் கூறியுள்ளனர். ஆனால் விஜயகாந்த்தோ பிடிகொடுக்காமல் அவர்களை சமாளித்து, உங்கள் வேண்டுகோளுக்கு நன்றி.. நீங்கள் அனைவரும் நல்ல தலைவர்கள்தான்.. கொள்கை பிடிப்புள்ளவர்கள்தான்.. இருந்தாலும் உங்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். நான் எப்படி உங்கள் அணிக்கு வருவது என கேள்வி கேட்டிருக்கிறார். இதில் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இரு திராவிட கட்சிகளும் மோசம்தானே.. மாற்று அணி தேவை என்பது மக்கள் விருப்பம்.. நீங்கள் வாருங்கள்.. மக்கள் நம்மை நிச்சயம் ஆதரிப்பார்கள் என கூறியுள்ளனர். ஆனாலும் விடாப்படியாக, மக்களுக்கு தி.மு.க. வை பிடிக்கவில்லை என்பது உண்மையாக இருந்தாலும் ஜெயலலிதாவை தூக்கி எறிய வேண்டும் என்பது மக்கள் விருப்பம். அதற்கான சக்தி கொண்ட கட்சி அல்லது கூட்டணிக்குதானே மக்கள் வாக்களிப்பார்கள் என்று சிரித்துக் கொண்டே அழுத்தம் திருத்தமாக விஜயகாந்த் கேட்க, வைகோ அணி தலைவர்கள் படு அப்செட்... ஆடிப் போயினர்.. அத்துடன், நீங்களும் வாங்க... தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்போம். அதற்கு முன்னதாக நிபந்தனையாக கூட்டணி ஆட்சிதான் தேவை என சொல்வோம். அதை எப்படியாவது தி.மு.க.வை ஒப்புக் கொள்ள வைத்து ஒரு பொது செயல்திட்டத்தை உருவாக்கலாமே என ஆலோசனை கூற.. என்ன செய்வது என தெரியாமல் வைகோ அணியினர் முழித்திருக்கிறார்கள். இதனால் எதுவும் மேற்கொண்டு பேசாத வைகோ அணி தலைவர்கள், நல்ல முடிவாக எடுங்கள் என்று மட்டும் கூறி திரும்பிவிட்டனர். அதேபோல் செய்தியாளர்களிடம் தாம் எதுவும் பேச விரும்பவில்லை.. நீங்கள் வந்தீர்கள்.. நீங்களே பேசுங்கள் என சொல்லிவிட, ஆகா கேப்டன் உறுதியான நிலையில் இருக்கிறாரே என நினைத்துக் கொண்டு முகத்தில் ஈயாடாத குறையாக செய்தியாளர்களிடம் விரக்தி ப்ளஸ் நம்பிக்கையுடன் பேசிவிட்டு சென்றார் வைகோ. இந்த சந்திப்பு குறித்து விஜயகாந்த் செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை. அதேபோல் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் இந்த சந்திப்பு குறித்து கேட்டபோது, விஜயகாந்த் இதுபற்றி எதுவும் கூறாத நிலையில் தாமும் கருத்து தெரிவிக்க இயலாது எனக் கூறியிருந்தார். ஆக விஜயகாந்த், தி.மு.க.வுடன் கூட்டணி சேர தயாராகிவிட்டார் என்பதையே மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் மூலமாக தெளிவுபடுத்திவிட்டார் கேப்டன் என்கிறது தே.மு.தி.க. வட்டாரங்க
//tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: