சென்னை:'உயர்கல்வியை சீர்குலைக்கும், 'காட்ஸ்' ஒப்பந்த்தில், இந்தியா
கையெழுத்திடக் கூடாது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி வலியுறுத்தி
உள்ளார்.தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:இந்தியாவில் உள்ள, பல்கலைக் கழக மானியக் குழு, உயர் கல்வி தொழில் நுட்பக் குழு, மருத்துவ கவுன்சில் ஆகியன கலைக்கப்பட்டு, தற்சார்பு ஒழுங்கு முறை ஆணையங்கள் அமைக்கப்படும். இதனால், வெளிநாட்டு மூலதனம் வருவதோடு, இட ஒதுக்கீடு மற்றும் இந்திய மொழிகளுக்கு பங்கம் ஏற்படும்.
இந்திய பாடத் திட்டத்தை, அமல்படுத்த முடியாது; கல்வி முதலீடுகளைப் பாதுக்காக்கவே சட்டங்கள் உருவாக்கப்படும்.கல்வி உதவித் தொகை ரத்து செய்யப்படும். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், எப்போதைக்கும், அதிலிருந்து பின் வாங்க முடியாது.
'ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், நாட்டின் உயர் கல்வித் துறைக்கு பேராபத்து ஏற்படும்' என, கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால், இதையும் மீறி, பார்லிமென்ட் நடக்கும் வேளையில், அங்கு விவாதிக்காமல், ஒப்புதல் இல்லாமல், உடன்படிக்கையில் கையெழுத்திட, மத்திய அரசு முயற்கிறது.எனவே, இந்த ஒப்பந்தத்திலிருந்து, மத்திய அரசு உடனடியாக விடுவித்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக