வியாழன், 24 டிசம்பர், 2015

ஆகமவிதியின் பெயரில் பார்ப்பன அடாவடி – வீடியோக்கள்


உச்சநீதிமன்றத்தின் அனைத்து சாதி அர்ச்சகர் தீர்ப்பையொட்டி மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றம் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, தீர்ப்பைக் கண்டித்து நடந்த சென்னை ஆர்ப்பாட்டம் – வீடியோக்கள்; னைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கில், தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் பாதுகாக்கும் வகையில் மிகவும் தந்திரமான சொற்றொடர்களில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றம் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு – முதல் பாகம்

மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றம் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு – பாகம் 2
‘கோயிலில் நுழையக்கூடாது, தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர்’ என்று நந்தனாருக்கு மரண தண்டனை தீர்ப்பு அன்று வழங்கப்பட்டது. அர்ச்சகர் மாணவர்களை அர்ச்சகராவதற்குத் தகுதியற்றவர்கள் என்று வெளியேற்றும் வாய்ப்பை இத்தீர்ப்பு இன்று வழங்கியுள்ளது.

ம.க.இ.க – ம.உ.பா.மை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் இறுதி பாகம்
இந்த தீர்ப்பு திமுக அரசு கொண்டு வந்த அரசாணையை ரத்து செய்வதாகக் கூறவில்லை என்பது வெற்றி அல்ல. நடைமுறையில் அதனை ரத்து செய்து விட்டது என்பதே உண்மை. “ஆகம விதி, சம்பிரதாயம், மரபு ஆகியவற்றுக்கு இணங்கவே அர்ச்சகர் நியமனங்கள் அமைய வேண்டும். அதே நேரத்தில் அந்த சம்பிரதாயங்கள் அரசியல் சட்ட உரிமைகளுக்கு முரணானதாக இருக்கக் கூடாது. இது பற்றி ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் பொருந்தும்படியன ஒரு உத்தரவைப் பிறப்பிக்க இயலாது. ஒவ்வொரு அர்ச்சகர் நியமனத்தையும் தனித்தனியே பரிசீலித்துப் பார்த்துத்தான் முடிவு செய்ய இயலும்” என்கிறது இத்தீர்ப்பு.

அர்ச்சகர் அடையாளத்தை துறந்தார் ரங்கநாதன் – ஆர்ப்பாட்டம்
சென்னையில் பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதனுடன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே உச்சிக் குடுமி நீதிமன்றத்தை கண்டித்தும், பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும், அதற்கு துணை போகும் பாசிச ஜெயா அரசைக் கண்டித்தும் விண்ணதிர முழக்கங்கள் முழங்கின.
ஆர்ப்பாட்டத்தின் முத்தாய்ப்பாக அர்ச்சக மாணவர் ரங்கநாதன் பெரியார் சாலைக்கு மாலை அணிவித்து பின்னர் தனது உருத்ராட்சக் கொட்டை மாலை, தீட்சை ஆகியவற்றை துறந்து இனி பார்ப்பன ஆதிக்கத்தை முறியடிக்கும் சுயமரியாதை போராட்டங்களில் ஈடுபடுவதாக உரையாற்றினார். அதன் பிறகு தோழர் ராஜூ உச்சநீதிமன்றத்தின் அயோக்கியத் தீர்ப்பை விளக்கி உரையாற்றினார்.
vinavu.com

தொடர்புடைய பதிவுகள்

கருத்துகள் இல்லை: