வியாழன், 24 டிசம்பர், 2015

கூட்டணி பேரத்தில் ஏதாவது பொறுக்க நினைக்கும் கொள்கை வீரர்கள்

இரண்டு பெரிய கம்பனிகளும் கூடாது? நாங்க நல்ல யோக்கியமானவுங்க
எங்களுக்கு ஒரு முறை சந்தர்ப்பம் கொடுத்துதான் பாருங்களேன் என்ற கோஷத்தில் சுமார் நான்கு கோஷ்டிகள் மூன்றாவது அணி அல்லது நாலாவது அணியாக ஷோ காட்டுகிறது.
இவர்கள் நிச்சயமாக ஷோதான் காட்டுகிறார்கள்.
உள்ளே இவர்களிடம் உருப்படியாக சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.
ஈழப்பிரச்சனை ஒட்டு வாங்கி தருமா என்று முயற்சித்து மௌனமாக ஏமாந்து போனவர்கள்.
ஊழல் என்று சொல்லிக்கொண்டே சொத்து குவிப்பு ராணியிடம் விலை போனவர்கள் . இது நிச்சயமான உண்மை. கடந்த தசாப்தங்களாக வேறு என்னதான் இவர்கள் செய்தார்கள்?
எப்படியாவது இவர்கள் காப்பற்றுவார்கள் என்று நம்பியவர்களை எப்படி இவர்கள் நட்டாற்றில் தள்ளி விட்டார்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள்.

சொந்தமாக எந்த அரசியல் கொள்கையும் உண்மையையில் இவர்களிடம் இல்லவே இல்லை.

நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஒரு ட்ராபிக் ராமசாமி அல்லது சகாயம் ஐ எ எஸ் போன்றவர்களின் கால்தூசிக்கு கூட இந்த மக்கள் நலன் போர்டுகாரர்கள் வரமாட்டார்கள்.

டாக்டர் அய்யா வெளிப்படையாகவே வன்னிய ஜாதிகட்சிதான் நடத்துகிறார், அப்படிதான் கொங்கு வேளாளர் கட்சி போன்றவர்களும்.
இவர்களை போன்ற ஆதிக்க ஜாதியிடம்இருந்து  விடுதலை பெறவேண்டி  விடுதலை  சிறுத்தைகள்  புதிய தமிழகம் போன்றவை  போராடுகின்றன, அவர்களின் போராட்டங்களிலும் அரசியலிலும் நேர்மை இருக்கிறது,  

ஆனால் விஜயகாந் கட்சியை  இன்னொரு அதிமுகவாகதான் பார்க்கவேண்டி இருக்கிறது.  நாட்டுக்கு ஒரு அதிமுகவே  சாபக்கேடு.
விஜயகாந்தாவது கொஞ்சம் கருத்து உள்ளவர் போல் தெரிகிறார். ஆனால் அவர் பெரும்பாலும் ஒரு போதையில் இருப்பது போல் தெரிகிறது. அவரது அரசியல் தொண்டர்களை மெய்பவராக பிரேமலதா வந்துவிட்டார். ஊரை அடித்து உலையில் போடுவதை தவிர அவர் இதுவரை என்னதான் சேவை செய்துள்ளார்?
தமிழகத்தின் எத்தனையோ அபத்தங்களில் பிரேமலதாவும் ஒன்று அதாவது நான் தேமுதிகவை குறிப்பிடுகிறேன்.
நடிகர் திலகம் வைகோ தனது எஞ்சிய காலத்தையாவது கலைத்துறையில் சேவை செய்யவேண்டும்.
இவரது அரசியல் சேவையை என்ன சொல்வது? இவரை போன்றவர்களுக்குத்தான் நெஞ்சில் உரமின்றி நேர்மை திறனின்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லி வீரரடி என்று பாரதி பாடினான்.

கருத்துகள் இல்லை: