ஞாயிறு, 20 டிசம்பர், 2015

டெல்லி பலாத்கார கொலையாளி சிறுவன் விடுதலை செய்யப்பட்டுவிட்டான்..அவனது உயிருக்கு ஆபத்தாம்...ரகசிய இடத்தில்...

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா( ஜோதி சிங்) பாலியல் பலாத்காரம் இளம் குற்றவாளியை விடுவிப்பதற்கு பலத்த எதிர்ப்பு நிலவியது. விடுதலையை எதிர்த்து நிர்பயாவின் பெற்றோர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் ஜந்தர் மந்தர் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. பலத்த எதிர்ப்புகளுக்கிடையில், இளம் குற்றவாளி, ரகசிய இடத்திலிருந்து விடுவிக் கப்பட் டுள்ளார். இவர், ஒரு தனியார் அமைப்பின் கீழ் பாதுகாப்பாக வைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், போராட்டம் நடத்தி வந்த நிர்பயாவின் பெற்றோர் திடீர் என்று கைது செய்யப் பட்டனர். இதைக்கண்டித்து பொதுமக்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்
செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம் குற்றவாளி இன்று (20.12.2015) விடுதலையாகியுள்ளார்.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ந்தேதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூர முறையில் தாக்கப்பட்டு வெளியே வீசப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா, சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த வழக்கில் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மற்றவர்களில் ஒருவர் இளம் குற்றவாளி. அதனால், அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இளம் குற்றவாளியின் தண்டனை காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் இன்று விடுவிக் கப்பட்டுள்ளார்.nakkheeran,in


கருத்துகள் இல்லை: