சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இலவச மொபைல் போன் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட, அ.தி.மு.க., தயாராகி வருகிறது.
தமிழகத்தில், 2006ல், முதன் முதலாக வாக்காளர்களுக்கு, இலவச கலர், 'டிவி' வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'மாணவர்களுக்கு இலவச லேப்-டாப், சைக்கிள், பெண்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, காஸ் அடுப்பு, ஆடு, மாடு போன்றவை, இலவசமாக வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், வரும் தேர்தலை மனதில் வைத்து, தி.மு.க., தரப்பில், மொபைல் போன் திட்டத்தை, தேர்தல் அறிக்கையில், அறிவிக்க உள்ள தகவல் பரவியது. அதற்கு முன், இலவச மொபைல் போன் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட, ஆளுங்கட்சி தயாராகி வருகிறது. dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக