புலி’
படத்தில் நாங்கள் சம்பள பாக்கி வைத்திருப்பதாக நடிகை ஸ்ரீதேவி அவதூறு
பரப்புகிறார் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினார்கள்.
விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் இணைந்து நடித்த படம்
‘புலி’. சிம்புதேவன் டைரக்டு செய்தார். சிபு தமீம், பி.டி.செல்வகுமார்
தயாரித்தனர். இந்த படம் கடந்த மாதம் வெளியானது. இதில் தனக்கு ரூ.50 லட்சம்
சம்பள பாக்கி இருப்பதாகவும், அந்த பணத்தை வாங்கி
தரும்படியும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஸ்ரீதேவி புகார் அளித்துள்ளார். இதற்கு பதில் அளித்து தயாரிப்பாளர்கள் சிபு தமீம், பி.டி.செல்வகுமார் ஆகியோர் அளித்த பேட்டி வருமாறு: ஸ்ரீதேவி மரியாதைக்குரிய மூத்த நடிகை. நாங்கள் அவருக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக அவதூறு பரப்பி இருக்கிறார். ‘புலி’ படத்தில் ஸ்ரீதேவியை ஒப்பந்தம் செய்தபோது ரூ.3 கோடி சம்பளம் கேட்டார். நாங்கள் சம்மதித்தோம். அதில் ரூ.2½ கோடியை உடனடியாக கொடுத்தோம். மீதி பணத்தை படம் வெளியாகும்போது தருவதாக சொன்னோம்.
படம் முடிந்து திரைக்கு கொண்டுவர தயாரானோம். இந்தி, தெலுங்கிலும் படத்தை வெளியிட திட்டமிட்டோம். ஆனால் இரண்டு மொழிகளிலும் குரல் பதிவுக்கு (டப்பிங்) ஸ்ரீதேவி மறுத்தார். அவரது கணவர் போனிகபூர் எங்களை தொடர்புகொண்டு குரல் பதிவுக்கு தனி சம்பளம் வேண்டும் என்றார். இந்தியில் பேச ‘டி.வி.’ உரிமையில் பங்குவேண்டும் என்றார்.
படங்களை மொழிமாற்றம், செய்து வெளியிடுவது தயாரிப்பாளர்கள் உரிமை அதற்கு பணம் தரமுடியாது என்றோம். அவர் கேட்கவில்லை. படம் நின்று போகக்கூடாது என்பதற்காக வேறுவழியின்றி தெலுங்கில் பேசவும், இந்தி டி.வி. உரிமைக்கும் சேர்த்து ரூ.75 லட்சம் கொடுத்தோம்.
படத்துக்கு எதிர்பார்த்ததை விட பல கோடி ரூபாய் கூடுதல் செலவாகிவிட்டது. 100 நாட்களில் படத்தை முடித்து தருவதாக டைரக்டர் சிம்புதேவன் கூறி இருந்தார். அது 152 நாட்களாகி விட்டது. படம் வெளியானபோது வருமான வரிசோதனையும் நடந்தது. இதனால் பெரிய சிக்கலுக்கு உள்ளானோம்.படத்தில் லாபம் கிடைக்கவில்லை. பெரிய நஷ்டம் ஏற்பட்டது.
எங்கள் நிலைமையை புரிந்துகொண்டு விஜய் உதவினார். சுருதிஹாசனும், சுதீப்பும் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்தனர். ஸ்ரீதேவிக்கு சம்பளத்தில் ரூ.50 லட்சம் பாக்கி இருந்தாலும், தெலுங்கு, இந்தி குரல் பதிவுக்காக ரூ.75 லட்சம் வாங்கி இருக்கிறார். எங்களை கட்டாயப்படுத்தி அந்த பணத்தை வாங்கினார். தெலுங்கிலும், இந்தியிலும் படத்தை விளம்பரம் செய்யும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ளவும் இல்லை. எங்களுக்கு ஒத்துழைப்பு தரவும் இல்லை.
இரண்டு மொழிகளிலும் ஒரு பைசா கூட எங்களுக்கு வரவில்லை. பேசிய சம்பளத்தில் இருந்து கூடுதலாக அவருக்கு ரூ.25 லட்சம் கொடுக்கப்பட்டு உள்ளது. மொத்தம் அவருக்கு ரூ.3¼ கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. படம் நஷ்டம் அடைந்த நிலையில், அவர் இன்னும் பணம் கேட்பது முறையல்ல. ஸ்ரீதேவி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்ய முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள் maalamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக