ஞாயிறு, 8 நவம்பர், 2015

மோடியின் மனைவிக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு...கட்டிய மனைவிக்கு துரோகம்...பிரமச்சாரி வேஷம்...

ஆமதாபாத்: விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யாத காரணத்தினால், பிரதமர்
நரேந்திர மோடி மனைவி யசோதா பென் மோடியின் பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது.பாஸ்போர்ட் விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. திருமணம் தொடர்பான சான்றிதழ் அல்லது கணவருடன் சேர்ந்து அளிக்கும் அபிடவிட் இணைக்கப்படாத காரணத்தினால் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய பாஸ்போர்ட் அலுவலர் கான் கூறியுள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் குடும்ப நண்பர்களையும் உறவினர்களையும் சந்திக்க செல்வதற்காக யசோதா பென் மோடி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.புதிய பாஸ்போர்ட் சட்டப்படி, புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள், திருமணம் செய்திருந்தால், அது தொடர்பான ஆவணம் இணைக்கப்பட வேண்டும்.


பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக யசோதா பென் சகோதரர் கூறுகையில், வெளிநாட்டில் எங்கள் குடும்ப நண்பர்கள் நிறைய பேர் வசிக்கின்றனர். அவர்கள் எங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதற்காக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தோம். ஆனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என கூறினார். மேலும் அவர், பாஸ்போர்ட் பெற, சட்ட வழிகள் ஏதும் உள்ளதா என ஆராய்ந்து வருகிறோம். பாஸ்போர்ட் பெறுவது அடிப்படை உரிமை என கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை: