"வாரிச்
சுருட்டும் கார்டன் கூட்டம்' என நக்கீரனில் வெளி வந்த கவர் ஸ்டோரியைத்
தொடர்ந்து ஏராளமான தகவல்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் பறந்து
வந்துகொண்டிருக்கின்றன. (2015 ஜூன் 27-30 இதழில் முதன்முதலில் இதை
வெளியிட்டதும் நக்கீரன்தான்) ஜெ.வின் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் உறவுச்
சங்கிலியில் இவரை விட்டுவிட்டீர்கள் என்ற தகவல்கள் ஒருபக்கம். மறுபக்கம்,
ஆட்சியைப் பயன்படுத்தி சம்பாதித்த பணத்தை முதலீடு செய்ய 38 கம்பெனிகளை
சசிகலாவின் உறவுகளையும் நட்புகளையும் டைரக்டர்களாக்கி நடத்து கிறார் என
நாம் ஆதாரத் துடன் தந்த பட்டியலையும் தாண்டி இன்னும் பல கம் பெனிகள்
இருக்கிறது என் கிறார்கள். அதில் முக்கியமா னது பலரும் அறிந்த மிடாஸ்
கோல்டன் டிஸ்டில்லரிஸ்.
96-ல் ஆட்சியை இழந்த ஜெ., 2001-ல் ஆட்சிக் கட்டிலில் மறுபடியும் ஏறிய வுடன் 28-10-2002ல் மிடாஸ் கம்பெனி தொடங்கப்படுகிறது.. 16 கோடி முதலீட் டில் தொடங்கப் பட்ட இந்தக் கம் பெனியின் டைரக் டர்களாக, ஆர்.கிட் டப்பா, ஆர்.அன்புக்கரசு, எஸ்.நாகைய்யன், ராவணன், கே.எஸ்.சிவக்குமார் ஆகியோர் டைரக்டர்களாகவும், அன்புக் கரசு, சந்திரபூபதி, வி.வி.மின ரல்ஸ் வைகுண்டராஜன், அவரது சகோதரர் சந்திரேசன், மற்றொரு சகோதரர் ஜெகதீசன், ஜெகதீசனின் மனைவி ரேணுகா ஆகியோர் பங்குதாரர்களாக வும் தங்களது பங்களிப்பை அளித்துள்ளார்கள். இதைத் தாண்டி வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனமாகவே மிடாஸோடு இணைந் திருக்கிறது.டாஸ்மாக் மூலம் மிடாஸின் லாபம் எகிறிப்பாய அதன் லாபத்தை குறைத்துக் காட்டும் விதமாக ஜாசன்ஸ் கோல்டன் ப்ரிவரிஸ் என்கிற மதுபான கம்பெனியையும் ஆரம்பித்த கூத்தும் இதற்கிடையே நடந்துள்ளது.
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு வைகுண்ட ராஜனும் மற்றவர்களும் மிடாஸிலிருந்து துரத்தப்படுகிறார்கள். ராவணனும் சிவக்குமாரும் மட்டும் டைரக்டர்களாக செயல்படுகிறார்கள். நடராஜன் வகையறா கார்டனிலிருந்து வெளி யேற்றப்பட்டவுடன், துக்ளக் சோ, அவ ரது மகன் ஸ்ரீராம் ராமசாமி ஆகியோ ரின் நிர்வாகத்தில் சில மாதங்கள் செயல்பட்ட மிடா ஸின் இயக்குனராக இளவரசியின் இன் னொரு மருமக னான கார்த்தி கேயன் நியமிக்கப்பட்ட அவர் இன்றுவரை தொடர்கிறார்.மிடாஸ் மாதிரியே நடுவில் சோ நிர்வாகம் செய்த நிறுவனம் ஸ்ரீவாரி சந்தனா எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட். ஜெ.வின் ஹைதராபாத் தோட்ட முகவரியைக் கொண்டு பதிவு செய்த இந்த நிறு வனத்தில் 2012-ஆம் ஆண்டு முதல் இள வரசியின் மருமக னான சிவக்குமார், சம்பந்தி கலியபெரு மாள் ஆகியோர் இயக்குநர்களாக இருக்கிறார்கள்.
நாம் வெளியிட்ட 38 கம்பெனிகளில் இடம்பெறாமல் புதிதாக இந்த லிஸ்ட்டில் இடம் பெற்ற கம்பெனி காட்டேஜ் பீல்டு ரிசார்ட்ஸ் லிமிடெட் கம்பெனி. 2003-ஆம் ஆண்டு தொடங் கப்பட்ட இந்தக் கம்பெனியின் ஆரம்பகட்ட இயக்குநர்களாக அனந்தராமன், சிவக்குமார், ரவிச்சந்திரன் இருந்திருக்கிறார்கள். அதன்பிறகு கலியமூர்த்தி குமாரவேலுவும் சிவக்குமாரும் இன்றுவரை தொடர்கிறார்கள்.நக்கீரன் அம்பலப்படுத்திய 38 கம்பெனிகளில் ஒன்று ரெயின்போ ஏர் என்கிற கம்பெனி. இந்தக் கம்பெனி கலாநிதி, தயாநிதிமாறன் சகோதரர்கள் ஸ்பைஸ் ஜெட் கம்பெனி யை வாங்கியதற்குப் போட்டியாக ஆரம்பிக் கப்பட்ட விமானக் கம்பெனி என அதிர்ச்சி யூட்டும் தகவலையும் விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.91-96 காலகட்டத் திற்குப் பிறகு ஜெ. ஆதரவுடன் சசிகலா வகையறாக்கள் பல்வேறு கம்பெனி தொடங்குவதை... தமிழகத்தில் இருந்த சமூக ஆர்வலர்கள் பலர் கண்காணித்து குறிப் பெடுத்து வந்திருக்கிறார்கள்.அதில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் ஜெ. மீது 91-96ஆம் ஆண்டு காலகட்டத்தில்,
முதலில் சொத் துக் குவிப்பு புகாரைக் கிளப்பிய சுப்ரமணிய சுவாமி யை சந்தித்து ஜெ.-சசி வகையறாக்களின் சொத்துக் குவிப்பு பற்றி ஆதாரத்துடன் புகார்களைக் கொடுத் தனர். ""அப்படியா நான் விடமாட்டேன். நான் ட்விட்டரில் ஒவ்வொரு கம்பெனியாக முதலில் வெளியிடுகிறேன்'' என தகவல் சொன்னவர்களை உற்சாகப்படுத்திய சுப்ர மணிய சுவாமி அதன் பிறகு அவர்களை கண்டு கொள்ளவேயில்லை என வருத்தத்துடன் சொன் னார்கள். எதிர்த் தரப் பைக் கேட்காமல் ஜெ.வுக்கு சுப்ரீம்கோர்ட், ஜாமீன் வழங்கிய போதும் சுவாமி மௌன மாகத்தான் இருந்தார்.. அவரை மோடி கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார் என அவர்கள் வருத்தப்பட்டனர்.""ஆயிரம் கோடி ரூபாய் தியேட்டரை கார்டன் தரப்பினர் மிரட்டித்தான் வாங்கினார்கள். அந்தத் தியேட்டர்களை வாங்குவதற்கு முன்பு தினமும் ஒரு அரசு அதிகாரி அந்த தியேட்டர்களுக்குச் சென்று ஏதாவது ஒரு சப்பை யான குறையைக் கண்டுபிடித்து நோட்டீஸ் கொடுப்பார். போலீசும் மாநகராட்சியும் கொடுத்த தொல்லை சொல்லி மாளாது. இளவரசி வகையறாக்களின் பெயருக்கு தியேட்டர்கள் மாறி யதும், அந்த தொல்லைகள் நின்றுபோனது'' என சொல்கிறார்கள் பீனிக்ஸ் மால் நிர்வாகிகள்.
இப்படி எல்லோரையும் மிரட்டி, உருட்டி மறுபடியும் சொத்துக் குவிப்பது... ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றுவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ.வுக்கு எதிரான நிலையை உருவாக்காதா? என அந்த வழக்கின் பேராசிரியர் அன்பழகன் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர் குமரேசனைக் கேட்டோம். ""அந்த வழக்கு 91-96 காலகட்டத்தில் ஜெ. தனது வருமானத் துக்கு அதிகமாகச் சேர்த்த 66 கோடி ரூபாய் சொத்துக்கு எதிரான ஊழல் வழக்கு.
அந்த வழக்கில் 96-க்குப் பிறகு வாங்கிய சொத்துக்களைச் சேர்க்க முடியாது. ஆனால் 91-96 காலகட்டத்தில் ஜெ. தனது ஊழல் பணத்தை முதலீடு செய்ய பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப் படும் இந்தோ-தோஹா கம்பெனி, ஜெயா ஃபைனான்ஸ் போன்ற கம்பெனிகள் இன்றும் ஆக்டிவ்வாக அதே வேலையைச் செய்து கொண்டிருப்பதை சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் எடுத்துரைப்போம்'' என்றார். கர்நாடகத் தரப்பிலும் இதைக் குறிப்பிடு கிறார்கள். "வலியப் போய் வழக்கை சிக்கலாக்கிக் கொள்கிறது கார்டன் தரப்பு' என சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக உள்ள தத்து, தனது பதவிக்காலம் டிசம்பரில் முடிவடைவதால் அடுத்த தலைமை நீதிபதியாக தாக்கூரை நியமிக்க பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் பரிந்துரைத் துள்ளார்.எதிர்தரப்பை கேட்காமல் ஜெ.வுக்கு ஜாமீன் வழங்கியவர் என புகார் சொல்லப்பட்ட தத்து விற்குப் பதிலாக தாக்கூர், தலைமை நீதிபதியாக நியமிக்கப்படப் போகிறார் என்கிற அறிவிப்பு வந்த அன்றே, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மத்திய அரசின் பாதுகாப்புப் படையை அனுப்பக்கூடாது என தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை டிஸ்மிஸ் செய்திருக்கிறார் தாக்கூர்.""நீதிபதிகளுக்கு தமிழக போலீஸாரால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை. மத்திய அரசின் பாதுகாப்புப் படையையும் வேண்டாம் என்கிறீர் கள். சென்னை உயர்நீதிமன்றம் பாதுகாப்பாக இயங்க ராணுவத்தை அனுப்பவா?'' எனக் கேட்டு தமிழக அரசை சாடியிருக்கிறார்.
சாரதா சிட் கம்பெனி வழக்கு, கிரிக்கெட் பெட்டிங் ஊழல் வழக்குகளை தயவு தாட்சண்யம் பார்க்காமல் கையாண்ட தாக்கூர், தலைமை நீதிபதியாக பதவியேற்பது கார்டன் வட்டாரத்தை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
நவம்பர் மாதம் 23-ம் தேதி விசாரணைக்கு வரும் சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கும் தாக்கூரின் மேற்பார்வையுடன்தான் விசாரிக்கப் படும் என்பதால் கொடநாட்டில் இது தொடர்பான ஆலோசனைகள் மும்முரமாக நடந்துவருகின்றன வாம். பழைய சொத்துக் குவிப்பு வழக்கில் எப்படித் தண்டனையிலிருந்து தப்புவது என ஆலோசித்துக் கொண்டிருக்கும் ஜெ.வுக்கு புதிதாக கிளம்பியுள்ள சொத்துக்குவிப்பு புகார்கள் கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளன என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.96-ஆம் ஆண்டு சுப்ரமணிய சுவாமி செய்ததுபோல் ஒரு புதிய சொத்துக் குவிப்பு புகாருடன் நீதிமன்றத்தினை யாராவது அணுகினால் என்ன நடக்கும்? என வழக்கறிஞர் வட்டாரங்களில் கேட்டோம்.""அந்தப் புகாரில் ஆதாரம் இருப்பதாக நீதிமன்றம் கருதினால் உடனடியாக புதிய சொத்துக்குவிப்பு வழக்கை ஜெ. மீது பதிவு செய்ய உத்தரவிடும். மறுபடியும் முதலில் இருந்து சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை புதிதாக தொடங்கும்'' என்பவர்கள், இது தொடர்பாக நீதிபதி சிவப்பா ஏற்கனவே வழங்கியிருக்கும் தீர்ப்பையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
-தாமோதரன் பிரகாஷ் nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக