இந்துத்துவா கொள்கைக்கான வெற்றிடத்தை சிவசேனா நிரப்பும் என அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மராட்டிய மாநிலத்தில் சுமார் 25 ஆண்டுகள் நகமும் சதையுமாக இருந்த பா.ஜ.க. – சிவசேனா கட்சிகளிடையே கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது திடீர் பிளவு ஏற்பட்டது. இரு கட்சிகளுக்கும் இடையே சுமூகமான உடன்பாடு ஏற்படாததால் சட்டசபை தேர்தலை தனித்தனியே சந்தித்தன.
தேர்தல் முடிவில், மொத்தம் 288 இடங்களைக் கொண்ட மராட்டிய சட்டசபையில், தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 145 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. பா.ஜனதா கட்சி அதிகபட்சமாக 122 இடங்களில் வெற்றி பெற்றது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி 63 இடங்களிலும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 42 இடங்களிலும் வெற்றி பெற்றன.
நீண்ட இழுபறிக்கு பிறகு பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி மந்திரிசபையில் சேர சிவசேனா சம்மதித்தது. இருப்பினும், பா.ஜ.க. மீது சிவசேனா மூத்த தலைவர்கள் அதிருப்தியுடன் உள்ளனர். பிகாரில் பாஜகவுக்கு ஏன் மரண அடி விழுந்தது என்பது இன்னும் இவனுகளுக்கு வெளங்கல...
இரு கட்சிகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே கருத்து மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே, மும்பை கல்யாண் – டோம்பிவிலி நகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் சிவசேனா அபார வெற்றி பெற்றுள்ளது. இதில் சிவசேனா 52 வார்டுகளையும், பா.ஜ.க 41 வார்டுகளையும் கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக, பீகார் சட்டசபை தேர்தலிலும் சிவசேனா கட்சி தனித்து போட்டியிட்டது.
இருப்பினும் எந்தவொரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், மற்ற மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தல்களிலும் போட்டியிட முடியும் என்று சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மேலும், கட்சி உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டால் நாட்டில் ஹிந்துத்துவா கொள்கைகளுக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும்பொருட்டு மற்ற மாநில சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிடுவோம் என்று உத்தவ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக