நாமக்கல், ராமாபுரம்புதுார் காலனியைச் சேர்ந்த வீராசாமி மகன்,
சசிதரன், 7. அங்குள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில், 2ம் வகுப்பு படித்து
வருகிறான். நேற்று முன்தினம் மாலை, வகுப்பறையில் சக மாணவன் ஒருவன்
வகுப்பறையில் மலம் கழித்துவிட்டான்.
அதை பார்த்த, வகுப்பாசிரியர் விஜயலட்சுமி, 35, சக மாணவனான சசிதரனை மிரட்டி அள்ள வைத்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், நேற்று காலை, பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பெற்றோர் தரப்பில், 'சம்பந்தப்பட்ட ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டும்' என, கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு அதிகாரிகள், 'இரண்டு நாட்களில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம்' என, உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு, அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், இரண்டு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. late news: ஆசிரியர் விஜயலட்சுமி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் மேலும் பதினைந்து நாள் காவலில் வைக்கபப்டுள்ளார்
இதுகுறித்து, ஆசிரியை விஜயலட்சுமி கூறுகையில், ''நான் ஆயாவை அழைத்து, சுத்தம் செய்யும்படி கூறிவிட்டு சென்று விட்டேன்; மாணவரை அள்ளச் சொல்லவில்லை,'' என்றார்.
மாணவர் சசிதரன் கூறுகையில், ''ஆசிரியர், 'டூ பாத்'தை எடுக்கச் சொன்னார்; எடுக்கவில்லை என்றால் அடிப்பார் என்பதால், எடுத்தேன்,'' என்றார்.
கைது, சஸ்பெண்ட் : நாமக்கல் போலீசில், மாணவரின் தந்தை வீராசாமி புகார் கொடுத்தார். எஸ்.பி., செந்தில்குமார் விசாரணை நடத்தினார். நேற்று மாலை விஜயலட்சுமி கைது செய்யப்பட்டார்.மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அல்லிமுத்து, ஆசிரியை விஜயலட்சுமியை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக