இலங்கையில் சமூக
நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரும், மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தவருமான மாதுலுவாவே சோபித தேரர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது 73வது வயதில் சிங்கப்பூரில் காலமானார்.காலஞ்சென்ற அவர் கோட்டே ஶ்ரீ நாக விகாரையின் விகாராதிபதியுமாகவும் இருந்தார்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதில் அவர் முக்கியப் பங்காற்றியிருந்தார்.
உள் நாட்டில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் ஊழலுக்கு எதிராகவும் குரல் எழுப்பி வந்த இவர் கடந்த ஜனாதிபதி பொதுத் தேர்தலில், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடக் கூடும் என்று கூட எதிர்பார்கப்பட்டிருந்தது.
அண்மைக் காலமாக உடல்நல பாதிப்புக்குள்ளான அவர் கடந்த செவ்வாய்கிழமை மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று அங்குள்ள மருத்துமனையொன்றில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். bbc.tamil.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக