சனி, 14 நவம்பர், 2015

பிரான்சில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு ! பாரிஸ் தாக்குதலில் பலியானோருக்கு...

பாரிசில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, இதில் பலியானோருக்காக 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இரு கலை அரங்கங்கள் மற்றும் கால்பந்து மைதானத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 150-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. மேலும் தாக்குதல் சம்பவத்தையொட்டி பிரான்ஸ் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க உள்ளதாக அதிபர் ஹாலண்டே கூறினார்.


ஐ.எஸ் தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, உள்நாட்டில் உள்ளவர்களின் உதவியுடன், திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு போர் நடவடிக்கை இது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டில் உள்ள முக்கிய அரசு அலுவலகங்கள், மதம் சார்ந்த முக்கிய பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சுமார் 1500 கூடுதல் படைகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போதைய நிலையில் இருந்து, பிரான்சிஸ் விரைவில் மீண்டு வரும் என்றும் ஹாலண்டே நம்பிக்கை தெரிவித்தார்.

பிரான்ஸ் பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், பாரிஸ் தாக்குதல் தொடர்பாக அதிபர் ஹாலண்டே உரையாற்ற உள்ளார்.

சிரியாவில், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் பிரான்சின் தலையீட்டை கண்டித்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: